ஏனாம் ஜிப்மரில் அவசர மருத்துவ சேவை பிரிவு..இயக்குனர் டாக்டர் விசிங் தொடங்கி வைத்தார்!
Emergency medical service department in Jipmer has been inaugurated by Director Dr Viching
ஜிப்மரின் இயக்குனர் டாக்டர் விசிங் நேகி புதிய தொலை மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்துள்ளார்.
தென்னிந்திய மாநிலங்களுக்கான தொலை மருத்துவ சேவைகளின் பிராந்திய மையமாக (Regional Resource Centre) ஜிப்மர் செயல்பட்டு வருகிறது.
ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகா, கேரளா, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி உள்ளீட்ட தென்னிந்திய மாநிலங்களுக்கான தொலை மருத்துவ சேவைகளை இந்திய அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகத்தின் (MoH&FW) மின்-சுகாதாரப் பிரிவின் கீழ் ஒருங்கிணைத்து ஜிப்மர் வழங்கிவருகிறது.
தேசிய மருத்துவக் கல்லூரி வலையமைப்பு (NMCN) திட்டம், தேசிய அறிவு வமையமைப்பு (NKN), இவப்ரோ திட்டம், தொலை மருத்துவ நீட்டம், BIMSTEC தொலை மருத்துவ திட்டம், மொராக்கோ தொலை மருத்துவ திட்டம் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச மற்றும் தேசிய தொலை மருத்துவத் திட்டங்கள் ஜிப்மரில் இயங்கி வருகின்றன.
இந்த வரிசையில் ஜிப்மரின் இயக்குனர் டாக்டர் விசிங் நேகி புதிய தொலை மருத்துவ சேவைகளை தொடங்கி வைத்துள்ளார்.
1. புதுச்சேரி மாநிலம், ஏனாமில் செயல்பட்டு வரும் ஜிப்மர் கிளையில், அவசர மருத்துவ சேவை பிரிவு மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகள் மருத்துவமனை பிரிவு ஆகியவற்றை ஒருங்கிணைத்து ஏனாம் தொலை மருத்துவ சேவை பிரிவு துவங்கப்பட்டுள்ளது. ஜிப்மர் புதுச்சேரியுடன் இணைக்கும் இந்த 'ஜிப்மர் டெலி-ஏணம் சேவை' ஏனாம் நோயாளிகளுக்கு 24x7 ஆன்லைன் ஆலோசனைகளை வழங்குகிறது.
2. 'ஜிப்ார் டெலி ஆம்புலன்ஸ் சேவை'ம், ஜிப்மர் ஆம்புலன்ஸ் முழுமையான தொலை மருத்துவ உபகரணங்களுடன் பொருத்தப்பட்டுள்ளது. இதனால் நோயாளியை ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவிற்கு கொண்டுவருவதற்கு முன்பே, விபத்து நடந்த இடத்திலேயே ஆம்புலன்ஸ் மருத்துவருக்கு ஜிப்மரின் அவசர சிகிச்சைப் பிரிவு மருத்துவர்கள் தேவையான உயிர்காக்கும் ஆலோசனைகளை வழங்குவர். இதன் மூலம் Golden Hour என்றழைக்கப்படும் மருத்துவத்தில் முக்கிய நேரமானது துரிதமாக கையாளப்படும்.

3. ஜிப்மர் அவசர மருத்துவ சேவை பிரிவில் மூன்று தனங்களிலும் நோயாளி-உதவியாளர் ஆன்லைன் கருத்துக் கேட்பு கியோஸ்க்குகள் நிறுவப்பட்டுள்ளன. அமார மருத்துவ சேவையில் நோயாளி பராமரிப்ப மேம்படுத்துவதன் ஒரு பகுதியாக, இந்த கியோஸ்க். நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்கள் ஜிப்மர் அவசர சிகிச்சை பிரிவில் வழங்கப்படும் மருத்துவ சேவைகள் குறிந்து தங்கள் கருத்துக்களைத் தெரிவிக்க அனுமதிக்கும் மேலும் நோயாளிகள் மற்றும் அவர்களது உதவியாளர்களிடமிருந்து வரும் கருத்துகளின் அடிப்படையில் ஜிப்மர் அதிகாரிகளால் தேவையான நடவடிக்கைகள் உடனடியாக எடுக்கப்படுகின்றன.
'நோயாளி உதவியாளர் வழிகாட்டி அமைப்பு / ஆப்' அறிமுகப்படுத்தும் செயல்முறையிலும் ஜிப்மர் ஈடுபட்டுள்ளது. இதன் மூலம் நோயாளி மற்றும் உதவியாளர் தங்களுக்குத் தேவையான குறிப்பிட்ட வெளிப்புற சிகிச்சைப் பிரிவு /ஆய்வகத்தைக் கண்டறிய ஆன்லைனில் வழிகாட்டுதலைப் பெறலாம். இந்த சேவை ஜிப்மரில் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.
English Summary
Emergency medical service department in Jipmer has been inaugurated by Director Dr Viching