இலவச என்ற பேச்சுக்கே இடமில்லை: பீகார் முதல்வர் திட்டவட்டம்! - Seithipunal
Seithipunal


பீகார் மாநிலத்தில் பா.ஜ.க கூட்டணி ஆட்சி அமைத்து ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதிஷ் குமார் ஆட்சி செய்து வருகிறார். இந்நிலையில் தற்போது பீகாரில் நடைபெற்று வரும் சட்டமன்ற பட்ஜெட் கூட்டத்தொடரில் இலவச மின்சாரம் வழங்க மாட்டோம் என நிதிஷ்குமார் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

இது குறித்து நிதீஷ் குமார் தெரிவித்திருப்பதாவது, நான் தொடக்கத்தில் இருந்தே மின்சாரம் இலவசமாக வழங்கப்படாது என தெரிவித்து வருகிறேன். எவ்வளவு குறைந்த விலைக்கு மின்சாரம் வழங்க முடியுமோ அந்த அளவிற்கு நாங்கள் வழங்குவோம். 

இது, தொடர்ந்து பாதுகாப்பாக இருக்கும். சில மாநிலங்களில் மின்சாரம் இலவசமாக வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் நாங்கள் இலவசமாக வழங்க மாட்டோம். 

தேர்தல் நெருங்கும் நேரத்தில் கூட இலவசமாக மின்சாரம் வழங்கப்பட மாட்டாது என தெரிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து பீகார் எரிசக்தி மந்திரி தெரிவித்திருப்பதாவது, 

மற்ற மாநிலங்களை விட பீகாரில் மின்சார கட்டணம் அதிகமாக வசூலிக்கப்பட்டால் நிச்சயம் விலையை குறைத்து வழங்குவோம். எத்தனை காலம் இலவச மின்சாரம் மூலம் இழப்பை சந்திக்க முடியும். பணம் எங்கிருந்து வருகிறது என தெரிவித்துள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Electricity not given free


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->