வாக்காளர் பட்டியல் தொடர்பான குற்றச்சாட்டு: உறுதியாக இருந்தால் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்து போட வேண்டும், இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும்: தேர்தல் ஆணையகம்..!
Election Commission warns Rahul to file complaint or apologize for voter list allegation
மஹாராஷ்டிரா மற்றும் ஹரியானா மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் தொடர்பாக தேர்தல் ஆணையகம் மீது காங்கிரஸ் எம்.பி., ராகுல் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். இதனை தேர்தல் ஆணையகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.
இந்நிலையில், வாக்காளர் பட்டியல் தொடர்பான குற்றச்சாட்டுகளில் உறுதியாக இருந்தால் ராகுல் சத்தியப் பிரமாணத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றும் அப்படி இல்லை என்றால் மன்னிப்பு கேட்க வேண்டும் என தேர்தல் ஆணையகம் தெரிவித்துள்ளது.
நேற்று நிருபர்களை சந்தித்த ராகுல், மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தலில் முறைகேடு இருப்பதை கண்டறிந்தோம் என்றும், எங்களது கேள்விகளுக்கு பதில் அளிப்பதை தேர்தல் ஆணையகம் தவிர்க்கிறது என்றும், டிஜிட்டல் வாக்காளர் பட்டியல் மற்றும் ஓட்டுச்சாவடிகளில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சி பதிவுகளை நாங்கள் கேட்டு வருகிறோம் என்று குறிப்பிட்டிட்டார்.

அத்துடன், இதுவரை தேர்தல் ஆணையம் அதனை அளிக்கவில்லை என்றும் தேர்தலில் முறைகேடு செய்ய, பா.ஜ.,வுக்கு தேர்தல் ஆணையகம் உதவுகிறதாகவும், அக்கட்சி உடன் சேர்ந்து ஓட்டுகளை திருடுகிறது என்றும், இது அரசியலமைப்புக்கு எதிரான குற்றம் என்று இதில் நீதிமன்றம் தலையிட வேண்டும் எனத் தெரிவித்து இருந்தார்.
இதனையும் தேர்தல் ஆணையகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது. இது மக்களை தவறாக வழிநடத்துகிறது எனத் தெரிவித்து இருந்தது. அத்துடன், கர்நாடகா, மஹாராஷ்டிரா,உபி உள்ளிட்ட மாநில தேர்தல் அதிகாரிகளும் அதனை மறுத்துள்ளனர். மேலும் ராகுலுக்கு தேர்தல் ஆணையகம் அனுப்பிய கடிதத்தில், 'வாக்காளர் பட்டியலில் முறைகேடு நடந்ததாக நீங்கள் கூறுகிறீர்கள்.

இது குறித்து நடவடிக்கை எடுக்க, இக்கடிதத்துடன் இணைக்கப்பட்டுள்ள பிரகடனம் அல்லது சத்திய பிரமாணத்தில் கையொப்பமிட்டு கர்நாடக தலைமை தேர்தல் கமிஷனரிடம் மாலைக்குள் சமர்ப்பிக்கும்படி கேட்டுக் கொள்கிறோம். குற்றச்சாட்டில் உறுதியுடன் இல்லை எனில் இனியாவது பொய் சொல்லி மக்களை திசை திருப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும்' எனக்குறிப்பிடப்பட்டு இருந்தது.
இந்நிலையில், தேர்தல் கமிஷன் வட்டாரங்கள் கூறுகையில், பொது மக்கள் முன்னிலையில் தெரிவித்த குற்றச்சாட்டுகளில் ராகுல் உறுதியாக இருந்தால், அவர், சத்திய பிரமாணத்தில் கையெழுத்து போட வேண்டும் என்றும், அதில் கையெழுத்து போடுவதில் அவருக்கு எந்த பிரச்னையும் இருக்காது என்றும் குறிப்பிட்டுள்ளது. மேலும் அப்படி இல்லை என்றால், அரசியலமைப்பு நிறுவனம் மீது தெரிவித்த அபத்தமான குற்றச்சாட்டுகளுக்காக நாட்டு மக்களிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.
English Summary
Election Commission warns Rahul to file complaint or apologize for voter list allegation