பசுவிடம் பாலியல் சீண்டல்: முதியவருக்கு செருப்பு மாலை அணிவித்து ஊர்வலம்..!
Elderly man who sexually abused a cow is paraded with sandals and garlands
மத்திய பிரதேசத்தில் பசுவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்பட்ட முதியவர் ஒருவரை, செருப்பு மாலை அணிவித்து ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர்.
ம.பி. மாநிலம் அகர் மால்வா மாவட்டத்தை சேர்ந்த முகமது ஷாகித் என்ற 55 வயது முதியவர் பசுவிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக உள்ளூர் அமைப்பு குற்றம் சாட்டியுள்ளது. இதையடுத்து ஷாகித் மீது விலங்குகள் வதை தடுப்புச் சட்டத்தின் கீழ் காவல்துறை வழக்கு பதிவு செய்து, அவர், கைது செய்து நீதிமன்றக் காவலில் அடைத்தது.
இதுகுறித்து போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளதாவது: கடந்த 09-ஆம் தேதி, ஈத்கா மைதானம் அருகே குற்றம்சாட்டப்பட்ட முகமது ஷாகித், பசுவிடம் அத்துமீறலில் ஈடுபட்ட்டுள்ளதாகவும், அதை நேரில் கண்ட சிலர், இதுகுறித்து சில அமைப்பினர் தகவல் தெரிவித்ததாக கூறியுள்ளனர்.
அதன் பின்னர் முகமது ஷாகித்தைப் பிடித்து, அப்பகுதி மக்கள், கிராமச் சந்தை வழியாக செருப்பு மாலை அணிவித்து கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலமாக அழைத்துச் சென்றுள்ளனர். போலீஸாருக்கு தகவல் கிடைத்தவுடன் ஷாகித்தைக் கைது செய்து விசாரித்து வருகிறோம் என்று குறிப்பிட்டுள்ளனர்.
English Summary
Elderly man who sexually abused a cow is paraded with sandals and garlands