ஆந்திரா, தெலுங்கானாவில் திடீர் நிலநடுக்கம்.. மக்கள் பீதி..!! - Seithipunal
Seithipunal


கடந்த சில நாட்களுக்கு முன்பு சிரியா, துருக்கி உள்ளிட்ட நாடுகளில் ஏற்பட்ட நிலநடுக்கத்தால் வீடுங்கள் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் பல்லாயிரம் கணக்கான மக்கள் இடுபாடுகள் சிக்கி உயிரிழந்தனர். இந்த நிலையில் தெலுங்கானா மாநிலம் கிருஷ்ணா நதி ஆற்றங்கரை ஓரம் உள்ள சிந்தலபாலம், மேலச்செருவு உள்ளிட்ட பல கிராமங்களில் நேற்று காலை 7:25 மணிக்கு 10 வினாடிகளுக்கு லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.

அப்பொழுது பூமி அதிக சத்தத்துடன் குலுங்கியதால் மக்கள் பீதி அடைந்தனர். அப்பொழுது வீட்டில் இருந்த பொருட்கள் சிதறி கீழே விழுந்தன. இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் தங்களது வீடுகளில் இருந்து அலறி அடித்துக் கொண்டு வெளியேறி சாலைகளில் தஞ்சம் அடைந்தனர்.

அதேபோன்று ஆந்திர மாநிலம் என்டிஆர் பல்நாடு மாவட்டத்தில் உள்ள நந்திகிராம், கஞ்சிக செர்லா, சந்தன பாடு, வீரபாடு மண்டலங்களிலும், அச்சம்பேட்டை, மாபாடு, பளி சந்தாலை சுற்று வட்டார பகுதிகளில் உள்ள கிராமங்களில் சுமார் 12 வினாடிகள் நிலநடுக்கம் நீடித்தது.

இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 3.2 ஆக பதிவாகி இருந்தது. ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களில் சமீப காலமாக அடிக்கடி நிலநடுக்கம் ஏற்படுவதால் அங்கு வசிக்கும் மக்கள் பீதி அடைந்துள்ளனர்.

எனவே புவியியல் துறையை சேர்ந்த வல்லுனர்கள் அடிக்கடி ஏன் நிலநடுக்கம் ஏற்படுகிறது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படுமா என்ற அச்சத்தை போக்கும் வகையில் ஆராய்ந்து தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Earthquake in Andhra Pradesh and Telangana


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->