சோப்பு பெட்டிகளில் போதைப்பொருள்...! பெங்களூரில் 7 கிலோ போதைப்பொருளுடன் 2 வட மாநில பெண்கள் ...!
Drugs in soap boxes 2 women from northern states arrested in Bangalore with 7 kg of drugs
சோப்பு பெட்டிகளில் கோகைன் போதைப்பொருள் கடத்த முயற்சிப்பதாக பெங்களூர் வருவாய் புலனாய்வு இயக்குநரகம் அலுவலகத்துக்கு (டிஆர்ஐ) ரகசிய தகவல் கிடைத்தது.

இதில் மணிப்பூர் மாநிலத்தை சேர்ந்த லால்ஜம்லுவாய் மற்றும் மிசோரமை சேர்ந்த லால்தாங்லியானி ஆகிய 2 பெண்கள் பெங்களூர் காட்டன்பேட்டை அருகே இதனை செய்யவுள்ளதாக அந்த தகவல் கிடைத்துள்ளது. இதைத்தொடர்ந்து,அதிகாரிகள் காவலர்களுடன் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சோதனை நடத்தினர்.
அங்கு சோப்பு பெட்டிகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த ரூ.14.69 கோடி மதிப்புள்ள 7 கிலோ கோகைன் போதைப்பொருளை பறிமுதல் செய்தனர். மேலும் லால்ஜம்லுவாய் மற்றும் லால்தாங்லியானி ஆகியோரையும் உடனடியாக கைது செய்தனர்.
இந்த இரு பெண்கள் பல நாட்களாக கோகைன் மணிப்பூர் பகுதியிலிருந்து கர்நாடகாவுக்கு கொண்டு வந்தது விற்பனை செய்தது விசாரணையில் தெரியவந்தது. மேலும், மாநிலங்களுக்கு இடையேயான இந்த கடத்தல் சம்பவம் குறித்து அதிகாரிகள் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
Drugs in soap boxes 2 women from northern states arrested in Bangalore with 7 kg of drugs