மத்திய அரசின் அறிவிப்புகளும், டாக்டர் ராமதாஸின் உடனடி ட்விட்டும்!  - Seithipunal
Seithipunal


நாடு முழுவதும் அமல்படுத்தபட்டுள்ள  ஊரடங்கால் நேரடியாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மத்திய அரசு தேவையான உதவிகளை செய்யும் என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக இன்று அவர் செய்தியாளர்களை சந்தித்த போது பல முக்கியமான அறிவிப்புகளை வெளியிட்டு உள்ளார். நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய அரசு சார்பில் சுமார் ஒரு லட்சத்து 70 ஆயிரம் கோடி ரூபாய் அளவிற்கு உதவிகள் வழங்கப்படும் என அவர் அறிவித்துள்ளார். 

இந்த அறிவிப்புகளுக்கு பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார். அவருடைய ட்வீட்டர் பதிவில், "கொரோனா வைரஸ் அச்சத்தால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட 80 கோடி ஏழை மக்களுக்கு மத்திய அரசு ரூ.1.70 கோடி அளவுக்கு பல்வேறு உதவிகளை மத்திய அரசு அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது. வாடும் மக்களுக்கு இது பேருதவியாக இருக்கும்!. அடுத்த 3 மாதங்களுக்கு  ஏழைக்குடும்பங்களுக்கு மாதம் 5 கிலோ இலவச அரிசி, பருப்பு,  ஜன்தன் வங்கிக்கணக்கு வைத்துள்ள பெண்களுக்கு மாதம் ரூ.500, மூத்த குடிமக்களுக்கு மாதம் ரூ.1000 வழங்குவது பொருளாதார நெருக்கடியை குறைக்கும்!" 

அமைப்பு சார்ந்த தொழிலாளர்கள் அடுத்த 3 மாதங்களுக்கு வருங்கால வைப்புநிதி செலுத்தத் தேவையில்லை. அவர்கள் பங்கையும், உரிமையாளர் பங்கையும் அரசே செலுத்தும் என மத்திய அரசு அறிவித்திருப்பது பாராட்டத்தக்கது!. வருங்கால வைப்பு நிதியில் உள்ள தொகையில் 75% தொகை அல்லது 3 மாத ஊதியத்தை பணியாளர்கள் முன்பணமாக பெறலாம் என்று அறிவிக்கப்பட்டிருப்பதும் வரவேற்கத்தக்க நடவடிக்கையாகும்!" என ராமதாஸ் பதிவிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

dr ramadoss welcomes central govt announcement for curfew refund


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->