ஏடிஎம் சேவை நிறுத்தப்படுகிறதா? தீயாய் பரவும் வதந்தி! வங்கிகள் கொடுத்த விளக்கம்!
Digital transactions Public Sector Banks atm center Govt
இந்தியா-பாகிஸ்தான் இடையிலான நிலவும் பதற்றம் காரணமாக, ஏடிஎம்கள் மற்றும் டிஜிட்டல் வங்கி சேவைகள் முடக்கப்படலாம் என்ற வதந்திகள் சமூக ஊடகங்களில் பரவியுள்ளன.
இதற்கு முற்றுப்புள்ளியாக, பாரத ஸ்டேட் வங்கி, பஞ்சாப் நேஷனல் வங்கி, பாங்க் ஆஃப் பரோடா, கனரா வங்கி உள்ளிட்ட முக்கிய பொதுத்துறை வங்கிகள் விளக்கம் வெளியிட்டுள்ளன.
“எங்கள் ஏடிஎம்கள், சிடிஎம்கள் மற்றும் அனைத்து டிஜிட்டல் சேவைகளும் தொடர்ந்து இயங்குகின்றன. பொய்யான தகவல்களை நம்ப வேண்டாம்,” என ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா தனது 'எக்ஸ்' பக்கத்தில் தெரிவித்துள்ளது.
பஞ்சாப் நேஷனல் வங்கியும், "வாடிக்கையாளர்கள் வீடில் இருந்தபடியே தடையற்ற வங்கி சேவைகளைப் பெறலாம்" என உறுதி செய்துள்ளது.
அதேபோல், பாங்க் ஆஃப் இந்தியா மற்றும் பஞ்சாப் & சிந்து வங்கிகளும் இவ்வாறான உறுதிப்படுத்தல்களை வெளியிட்டுள்ளன.
இதற்கிடையில், வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களின் சைபர் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று மாலை முக்கிய ஆலோசனை கூட்டம் நடத்த உள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
English Summary
Digital transactions Public Sector Banks atm center Govt