டிஜிட்டல் கைது ; முதியவரை ஏமாற்றி ரூ.95 லட்சம் பறித்த சகோதரர்கள்! - Seithipunal
Seithipunal


டிஜிட்டல் கைது முதியவரை ஏமாற்றி ரூ.95 லட்சம் பணம் சகோதரர்கள் இருவரை போலீசார் கைது செய்துள்ளனர்,

சமீப காலமாக 'டிஜிட்டல் கைது' என்ற மோசடி வலையில் சிக்கி தவித்து பலர் தங்கள் பணத்தையும்,  இழந்து வருகின்றனர். 'மோசடி கும்பல் சி.பி.ஐ., அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அதிகாரிகளை போல பேசி பொதுமக்களை வீட்டில் சிறை பிடிப்பதை போல பணம் பறிப்பது தற்போது வாடிக்கையாகிவிட்டது .இந்த மோசடிகள் ' நாடு முழுவதும் நடந்து வருகின்றன.நேற்று டிஜிட்டல் கைது என வலைவீசி ரூ.20 லட்சம் மோசடி செய்த இரண்டு வாலிபர்களை கேரள போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

இந்தநிலையில் அதேபோல ஒரு சம்மபவம்  உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் நடந்துள்ளது.  74 வயது முதியவர் ஒருவரிடம் மர்ம நபர்கள் 'டிஜிட்டல் கைது' மோசடியை அரங்கேற்றி ரூ.95 லட்சத்தை பறித்துள்ளனர். இது தொடர்பாக கடந்த ஏப்ரல் 8-ந்தேதி பதிவு செய்யப்பட்ட புகாரின் அடிப்படையில், மோசடியில் ஈடுபட்டவர்கள் குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் இந்த விசாரணையின் மூலம், முதியவரை ஏமாற்றி பணம் பறித்தவர்கள் மராட்டிய மாநிலம் மிரா ரோடு பகுதியில் வசித்து வருவது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அங்கு விரைந்து சென்ற போலீசார், முகமது இக்பால் பாலாசாகேப்மற்றும் அவரது சகோதரர் ஷைன் இக்பால் பாலாசாகேப்ஆகிய இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்கள் மீது ஏமாற்றி பணம் பறித்தல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Digital arrest brothers who cheated an elderly person and stole 95 lakh rupees


கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தவெக தலைமையில் மூன்றாவது கூட்டணி அமையுமா?




Seithipunal
--> -->