பையில் கிடந்த 'சாக்லேட் கவர்': திறந்து பார்த்த அதிகாரிகளுக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
diamond smuggled chocolate cover Hyderabad airport
தெலுங்கானா, ஹைதராபாத்தில் உள்ள ராஜீவ் காந்தி சர்வதேச விமான நிலையத்தில் இருந்து துபாய்க்கு வைரம் கடத்துவதாக வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
தகவலின் அடிப்படையில் வருவாய் புலனாய்வு இயக்குனரக அதிகாரிகள் ஹைதராபாத்தில் இருந்து துபாய்க்கு செல்லும் பயணிகளை சோதனை நடத்தினர்.
அப்போது சந்தேகத்திற்கு இடம் அளிக்கும் வகையில் அங்கு வந்த 2 பயணிகளின் உடைமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

சோதனையில் அவர்கள் வைத்திருந்த ஒரு பையில் சாக்லேட் அவர்களால் மறைத்து வைக்கப்பட்டிருந்த வைரங்கள் கண்டுபிடிக்கப்பட்டது.
பறிமுதல் செய்யப்பட்ட 5569.64 காரட் வைரங்கள் வைரங்களின் மதிப்பு ரூ. 6.03 கோடியாகும். மேலும் அவர்களிடம் இருந்து ரூ. 1 லட்சம் இந்திய பணம் மற்றும் 9.8 லட்சம் வெளிநாட்டு கரன்சி போன்றவையும் பறிமுதல் செய்யப்பட்டது.
இதனைத் தொடர்ந்து 2 பயணிகளும் எங்கிருந்து வைரங்களை கடத்தி வந்தனர். இந்த கடத்தலில் வேறு யாராவது தொடர்பு கொண்டு உள்ளனரா என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
English Summary
diamond smuggled chocolate cover Hyderabad airport