ஆங்கில புத்தாண்டு: சபரிமலை ஐயப்பன் கோவிலில் திரண்ட ஏராளமான பக்தர்கள்! - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு ஆண்டும் மண்டலம் மற்றும் மகர விளக்கு பூஜை காலங்களில் சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள். 

அது போல் இந்த ஆண்டு மண்டல பூஜை கடந்த 27 ஆம் ஆண்டு தேதி முடிவடைந்து கோவில் நடை மூடப்பட்டது. 30 ஆம் தேதி மகர விளக்கு பூஜைகாக ஐயப்பன் கோவில் நடை திறக்கப்பட்டு அன்று முதல் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சுனாமி தரிசனம் செய்து வருகின்றனர். 

பக்தர்களின் கூட்டம் மண்டல பூஜை காலத்தில் அதிக அளவில் இருந்ததால் பல நாட்கள் கடும் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி பக்தர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். 

அது போல் மகர விளக்கு பூஜை காலங்களில் நெரிசல் ஏற்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் செய்யப்பட்டது. பம்பை, சன்னிதானம் உள்ளிட பல்வேறு இடங்களில் கண்காணிப்பு பலப்படுத்தப்பட்டு சன்னிதானத்திற்கு பக்தர்களை ஒழுங்குப்படுத்தி அனுப்பும் பணியில் போலீசார் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில் ஆங்கில புத்தாண்டு தினத்தில் சுவாமி தரிசனம் செய்வதற்காக பக்தர்கள் சபரிமலை ஐயப்பன் கோவிலில் திரண்டனர்.

அதிக அளவில் பக்தர்கள் நேற்று முதல் கூட்டம் கூட்டமாக காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளையும் தேவஸ்தானம் செய்து வருகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

devotees gather sabarimala at new year


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->