விவசாயிகளுக்கு மாபெரும் துரோகம்.. மாநில அரசின் அவசர சட்டம்.!! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலத்தில் உள்ள பெங்களூரில் முன்னாள் பிரதமர் தேவகவுடா செய்தியாளர்களை சந்தித்தார். இந்த செய்தியாளர்கள் சந்திப்பில் அவர் தெரிவித்தாவது, " விவசாய பெருமக்களுக்கு எதிராக இருக்கும் அவசர சட்டங்கள் பல கர்நாடகாவில் பிறப்பிக்கட்புள்ளது. வேளாண்மை சந்தை திருத்தும், நில சீர்திருத்த சட்டம் போன்றவை அமல்படுத்தப்பட்டுள்ளது. இதனால் விவசாய பெருமக்கள் மற்றும் விவசாய கூலித்தொழிலாளர்களின் நிலைமை மிகவும் மோசமாகும். 

இந்த விஷயம் தொடர்பாக முதலமைச்சர் எடியூரப்பாவிற்கு 3 பக்கங்கள் கொண்ட கடிதத்தை எழுதியுள்ளேன். மேலும், அவசர சட்டத்தை உடனடியாக ரத்து செய்ய கூறியும் கோரிக்கை வைத்துள்ளேன். இந்த சட்டம் விவசாயிகளுக்கு விரோதமானது. ஆகையால் இது ரத்து செய்யப்பட்டாகவேண்டும். கொரோனா காரணத்தால் அமைதியாக இருந்து வந்தேன். ஊரடங்கை மதிக்க வேண்டும் என்று அமைதி காத்தேன். 

அரசின் அவசர சட்டத்தால் விவசாய பெருமக்களுக்கு தொந்தரவு ஏற்படும். இதனால் அரசு விழித்து செயல்பட வேண்டும். நிலசீர்திருத்த சட்டத்தின் காரணமாக விவசாய நிலங்கள் அனைத்தும் ரியல் எஸ்டேட் துறையினரின் வசம் செல்லும். அரசு விவசாயிகளின் தோழனாக செயல்பட வேண்டும். மோசமான சட்டங்களுக்கு அரசு வித்திட கூடாது. இதனை வாபஸ் பெறாத பட்சத்தில் போராட்டம் நடத்துவேன் " என்று கூறினார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Deve Gowda warn Karnataka govt


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->