டெல்லியில் உச்சகட்ட பதற்றம்: செங்கோட்டை அருகே கார் குண்டுவெடிப்பு? தீவிரவாதிகள் சதியா?!
Delhi Red Fort car blast
தலைநகர் டெல்லியில் உள்ள செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையத்தின் கேட் எண் 1 அருகே கார் ஒன்று குண்டுவெடிப்பு சம்பவத்தால் சேதமடைந்ததாக வெளியான தகவல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வெடிப்பு காரணமாக மூன்று முதல் நான்கு வாகனங்கள் தீப்பிடித்து சேதமடைந்ததாக டெல்லி தீயணைப்புத் துறைக்கு தகவல் கிடைத்துள்ளது.
இந்தச் சம்பவம், முன்னதாக ஜம்மு-காஷ்மீரில் நடந்த தீவிரவாத நடவடிக்கையுடன் தொடர்புடையதா என்ற கோணத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது.
முன்னதாக நடந்த தீவிரவாத சதி முறியடிப்பு
இன்று முன்னதாக, தீவிரவாதிகளுக்கு ஆதரவாகச் செயல்பட்டதாகக் காஷ்மீரைச் சேர்ந்த மருத்துவர் அதீல் அகமது ராத்தர் கைது செய்யப்பட்டார். அவரது லாக்கரைச் சோதனை செய்ததில், ஏ.கே.47 ரக துப்பாக்கி மற்றும் வெடிபொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில், ஹரியானா மாநிலம் ஃபரிதாபாத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 300 கிலோ ஆர்.டி.எஸ். (RDS) வெடிமருந்தை போலீசார் பறிமுதல் செய்தனர். இது மிகவும் சக்தி வாய்ந்த வெடிமருந்து ஆகும்.
மேலும், இந்தச் சதித் திட்டத்தில் புல்வாமா மாவட்டத்தைச் சேர்ந்த மற்றொரு மருத்துவர் முசாமில் ஷகீல் என்பவருக்கும் தொடர்பு இருப்பது தெரிய வந்தது. அவரது வாடகை வீட்டில் 2563 கிலோ வெடிபொருள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தற்போது இரண்டு மருத்துவர்களும் போலீஸ் காவலில் வைத்து விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.