டெல்லி முதல்வருக்கு வந்த நோட்டீஸ் - அதிரடி காட்டும் போலீசார்.! - Seithipunal
Seithipunal


டெல்லி மாநிலத்தின் முதல்வராக அரவிந்த் கெஜ்ரிவால் இருந்து வருகிறார். இவர் கடந்த வாரம் ஆம் ஆத்மி ஆட்சியை கவிழ்க்க, எங்கள் கட்சி எம்.எல்.ஏ.-க்களிடம் பாஜக பேரம் பேசியது. ஒரு எம்.எல்.ஏ.-வுக்கு தலா 25 கோடி ரூபாய் என ஏழு எம்.எல்.ஏ.-க்களிடம் பேரம் பேசியதாக பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார்.

முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றச்சாட்டை டெல்லி மாநில பாஜகவினர் மறுத்தனர். மேலும், பேரம் பேசியதற்கான ஆதாரத்தை வெளியிட வேண்டும். கெஜ்ரிவாலின் ஆதாரமற்ற குற்றச்சாட்டுகள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாஜக கட்சி தலைவர் வீரேந்திர சச்தேவா தலைமையிலான உயர்மட்டக்குழு டெல்லி காவல் ஆணையரிடம் புகார் அளித்தது.

இந்த நிலையில், டெல்லி போலீசின் குற்றப்பிரிவு அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது. இதுகுறித்து வீரேந்திர சச்தேவா கூறுகையில் "அரவிந்த் கெஜ்ரிவாலின் போலி குற்றச்சாட்டுக்கு நாங்கள் கண்டனம் தெரிவித்துள்ளோம்.

மேலும், புகார் மனு அளித்தோம். போலீசார் அவருக்கு நோட்டீஸ் அனுப்பியிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. தற்போது கெஜ்ரிவால் அவரது குற்றச்சாட்டு, அணுகப்பட்ட அவரது கட்சியின் எம்.எல்.ஏ.-க்கள் யார்?. அவர்களிடம் பேசியது யார்? என்பது குறித்து தெரிவிக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi police send notice to aravind kejrival


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->