ஆசிட் ஊற்றி, தீவைத்து மனைவியை கொலை செய்த கணவனின் அதிர்ச்சி பதில்! நாட்டையே உலுக்கிய கொடூரகொலை! - Seithipunal
Seithipunal


டெல்லி அருகே நடந்த கொடூர சம்பவம் மொத்த நாட்டையும் உலுக்கியுள்ளது.

கிரேட்டர் நொய்டா பகுதியில் வசித்த விபின், 2016ஆம் ஆண்டு நிக்கியுடன் திருமணம் செய்து கொண்டார். அவர்களுக்கு ஒரு மகன் உள்ளான்.

நிக்கியின் சகோதரி, விபினின் சகோதரனை திருமணம் செய்ததால், இரண்டு குடும்பங்களும் நெருங்கிய உறவால் இணைந்திருந்தன.

திருமணத்திற்கு பின், நிக்கியின் குடும்பத்திடம் இருந்து 35 லட்சம் ரூபாய் வரதட்சணை கோரப்பட்டதாக கூறப்படுகிறது. இதற்காக அடிக்கடி தகராறு ஏற்பட்டது.

கடந்த 21ஆம் தேதி பிரச்சினை தீவிரமடைந்து, விபினும் அவரது தாயாரும் சேர்ந்து நிக்கியை தாக்கினர். விபின் தனது மனைவியின் தலைமுடியை இழுத்து தாக்கும் வீடியோ வெளியானது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

அதுமட்டுமின்றி, ஆசிட் ஊற்றி, தீ வைத்து கொளுத்தியதால், நிக்கி பரிதாபமாக உயிரிழந்தார். சம்பவம் நடந்த காட்சிகளும் இணையத்தில் பரவின.

இது தொடர்பாக விபின் போலீசாரால் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்படுவதற்கு முன்பு, அவர் தனது இன்ஸ்டா பக்கத்தில், “என்னை கொலைகாரன் என அழைக்கிறார்கள், ஆனால் உண்மையை யாரும் கேட்கவில்லை” என்று பதிவிட்டிருந்தார்.

இந்த கொடூரச் சம்பவம் குறித்து நிக்கியின் சகோதரி காஞ்சன், “என் சகோதரியை மாமியார் குடும்பம் தொடர்ந்து கொடுமைப்படுத்தியது. வீட்டிலிருந்து துரத்திவிட்டு, விபினுக்கு மறுமணம் செய்து வைக்க திட்டமிட்டனர். சம்பவ நாளில் நான் தடுத்தபோதும் என்னையும் தாக்கினர். நான், என் சகோதரியின் மகன் அருகிலிருந்தும் அவளை காப்பாற்ற முடியவில்லை” என்று வலியுடன் கூறினார்.

மேலும், நிக்கியின் சிறுவன், “என் தாயார் மீது ஏதோ ஊற்றி, தீ வைத்து கொளுத்தினார்கள்” என்று அழுது சொன்னான்.

35 லட்சம் ரூபாய் வரதட்சணைக்காக மனைவியை தீ வைத்து கொன்ற இந்தச் சம்பவம் சமூகத்தையே அதிர்ச்சியிலும் கோபத்திலும் ஆழ்த்தியுள்ளது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Delhi Noida Dowry case murder Arrest 


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->