டெல்லியில் சோகம்: வாடகை செலுத்த முடியாததால் தாய் மற்றும் இரு மகன்கள் தற்கொலை!
Delhi House Rent suicide mother and 2 son
தலைநகர் டெல்லியில் வாடகை செலுத்த முடியாமல் வீட்டை விட்டு வெளியேற்றப்படும் சூழல் காரணமாக, ஒரு தாய் மற்றும் அவரது இரண்டு மகன்கள் ஒரே குடும்பமாகத் தற்கொலை செய்து கொண்ட சோகச் சம்பவம் அரங்கேறியுள்ளது.
குடும்பத்தின் பின்னணி:
டெல்லியின் கல்காஜியில் உள்ள ஒரு வீட்டில் அனுராதா கபூர் (52), அவரது மகன்கள் ஆஷிஷ் கபூர் (32) மற்றும் சைதன்யா கபூர் (27) ஆகியோர் மாதம் ரூ. 40,000 வாடகைக்கு வசித்து வந்தனர். கட்டுமானத் துறையில் பணியாற்றிய அனுராதாவின் கணவர் கடந்த ஆண்டு மறைந்த நிலையில், மகன்களுக்கும் வேலை இல்லாததால், அந்தக் குடும்பம் பெரும் பண நெருக்கடி மற்றும் கடன் சுமையால் அவதிப்பட்டுள்ளது.
கடந்த டிசம்பர் 2023 முதல் வாடகை செலுத்த முடியாமல், வீட்டு உரிமையாளருடன் அடிக்கடி வாக்குவாதங்கள் நடந்துள்ளன.
வீட்டை காலி செய்ய வந்த அதிகாரிகள்:
வாடகை பாக்கி காரணமாக வீட்டு உரிமையாளர் நீதிமன்றத்தை அணுகினார். இதையடுத்து, நீதிமன்ற உத்தரவின் பேரில் வீட்டை காலி செய்யப் போலீஸ் மற்றும் சட்ட அலுவலக அதிகாரிகள் கடந்த வெள்ளிக்கிழமை வந்தனர். வீடு உள்ளே பூட்டப்பட்டிருந்ததால், போலி சாவியைப் பயன்படுத்தி கதவைத் திறந்தபோது, தாய் மற்றும் அவரது இரண்டு மகன்களும் மின்விசிறியில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டனர்.
சடலங்களுக்கு அருகில் கண்டெடுக்கப்பட்ட தற்கொலைக் குறிப்பில், பண நெருக்கடி காரணமாக இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிடப்பட்டிருந்தது என்று போலீசார் தெரிவித்தனர். சடலங்கள் பிரேதப் பரிசோதனைக்காக எய்ம்ஸ் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
English Summary
Delhi House Rent suicide mother and 2 son