ஏ.டி.எம் எண் வழங்காத பெண், கத்தி முனையில் பாலியல் பலாத்காரம்..!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் அமலாகியுள்ள ஊரடங்கு மே மாதம் 31 ஆம் தேதியுடன் நிறைவுபெறவுள்ள நிலையில், நான்காம் கட்ட ஊரடங்கில் பல தளர்வுகள் அமல்படுத்தப்பட்டது. அந்தந்த மாநிலங்களை பொறுத்து பல தளர்வுகள் வழங்கப்பட்டது. 

முழு அளவிலான தளர்வுகள் வழங்கப்படவிலை என்றாலும், நாட்டின் பெரும்பாலான பகுதியில் குற்ற சம்பவங்களும் தொடர்ந்து நடைபெற துவங்கியுள்ளது. இந்தியாவின் தலைநகரான டெல்லியில் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளது அரங்கேறியுள்ளது. 

டெல்லியின் தென் பகுதியில் உள்ள ஜனக்பூரா பகுதியை சார்ந்த 23 வயது இளம்பெண், திருடன் ஒருவனால் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளார். பெண் தனது வீட்டின் மேல் மாடியில் நின்று கொண்டு இருந்த நிலையில், அங்கு வந்த திருடன் பெண்ணை கத்தி முனையில் மிரட்டி பெண் அணிந்த தங்க நகைகளை வாங்கியுள்ளான். 

பின்னர் பெண்ணின் அறைக்குள் சென்று அவரது ஏ.டி.எம் கார்டை எடுத்த நிலையில், இரகசிய எண்ணை கேட்டுள்ளான். இதனை பெண் தர மறுக்கவே, பெண்ணை கடுமையாக தாக்கி பாலியல் பலாத்காரம் செய்துள்ளான். அணைத்து கொடூரத்தையும் அரங்கேற்றி, கத்தி முனையில் மீண்டும் இரகசிய எண்ணை பெற்றுள்ளன. 

திருடனின் கொடூர செயல் மற்றும் காமுக கொடூரத்தால் பாதிக்கப்பட்ட பெண்மணி அக்கம் பக்கத்தினரை உதவிக்கு அழைத்த நிலையில், காமுக திருடன் சம்பவ இடத்தில் இருந்து தப்பி சென்றுள்ளான். பின்னர் பெண் சிகிச்சைக்காக அங்குள்ள மருத்துவமனையில் அனுமதி செய்யப்பட்ட நிலையில், காவல் நிலையத்தில் இது குறித்து புகார் அளிக்கப்பட்டுள்ளது. பின்னர் காவல் துறையினர் காமுகனை கைது செய்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi girl sexual abuse police arrest culprit


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal