வெட்கம் இல்லாத மத்திய அரசு - பிரியங்கா காந்தி விமர்சனம்.! - Seithipunal
Seithipunal


டெல்லியில் வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து, விவசாயிகள் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டம் 75 நாட்களை நிறைவு செய்துள்ள நிலையில், குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணி வன்முறையில் முடிந்தது. 

இந்நிலையில், டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டத்தில் கலந்துகொண்ட தந்தையை, இராணுவத்தில் கிடைத்த விடுமுறையின் போது மகன் காண வந்த சம்பவம் நடைபெற்றுள்ளது. இதன்போது, தனது மகனிடம் தந்தை தன்னிலை குறித்து தெரிவித்துள்ளார். 

இந்த விஷயம் தொடர்பாக ட்விட்டரில் மத்திய அரசை கடுமையாக சாடியுள்ள பிரியங்கா காந்தி, " கடந்த 75 நாட்களாக இராணுவ வீரரின் தந்தை பிழைப்பிற்காக போராடி வருகிறார். அவர்களை பயங்கரவாதிகள், துரோகிகள், சதிகாரர்கள் என்று சித்தரிக்க மத்திய அரசு முயற்சி செய்து வருகிறது. போராடுபவர்களுக்கு பல பெயர்களை வைத்து அழைக்கும் அரசு வெட்கமில்லாத அரசு " என்று தெரிவித்துள்ளார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Delhi Farmers Protest Priyanka Statement against Central Govt


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal