#டெல்லி | விமான பணிப்பெண் பலாத்காரம்! குற்றவாளி வசமாக சிக்கியது எப்படி?! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் தலைநகரான டெல்லியில் உள்ள தனியார் விமான நிறுவனத்தில் 30 வயதுடைய பெண் ஒருவர் விமான பணிப்பெண்ணாக பணியாற்றி வருகிறார். இவர் அங்குள்ள மெஹ்ருலி பகுதியில் வசித்து வருகிறார். 

அந்தப் பெண்ணுக்கு ஒரு ஆண் நபருடன் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. அரசியல் கட்சியை சேர்ந்த அந்த நபர் அப்பகுதியின் தலைவராகவும் செயல்பட்டு வந்துள்ளார். 

இந்நிலையில், நேற்று இரவு மதுபோதையில் விமான பணிப்பெண்ணின் வீட்டிற்கு வந்த ஆண் நபர், அந்த பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இந்நிலையில், பாதிக்கப்பட்ட பெண் அந்த நபரை தனது வீட்டின் அறையில் வைத்து பூட்டியுள்ளார். 

அதன் பிறகு இந்த சம்பவம் குறித்து போலீசாருக்கு தகவல் கொடுத்துள்ளார். இந்த தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் வீட்டின் அறையில் பூட்டி வைக்கப்பட்டிருந்த நபரை கைது செய்து, அந்த பெண் கொடுத்த புகாரின் அடிப்படையில் அவரை சிறையில் அடைத்தனர்.
 


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

delhi airport worker complaint in sexually harresment case police arrested in accuest


கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?Advertisement

கருத்துக் கணிப்பு

முதலமைச்சருடைய சிங்கப்பூர், ஜப்பான் பயணம் தோல்வி என எடப்பாடி பழனிசாமி கூறுவது?
Seithipunal