சபரிமலையில் பறிபோன உயிர்..! குடும்பத்தினருக்கு காத்திருந்த அதிர்ச்சி..!   - Seithipunal
Seithipunal


கார்த்திகை மாதம் தொடக்கத்தையொட்டி, மகரஜோதி தரிசனத்திற்காக சபரிமலைக்கு தமிழகத்தில் இருந்து பெருமளவிலான பக்தர்கள் செல்கின்றனர். இதன் காரணமாக, மகரஜோதி நடை திறக்கப்பட்ட முதல் நாளிலே சபரிமலையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

மேலும், தொடர்ந்து பக்தர்கள் வந்து கொண்டே இருக்கிறார்கள். சபரிமலையில் பக்தர்களின் கூட்டம் மிகவும் அதிகமாக இருப்பதால் அவர்களின் பாதுகாப்பு கருதி, பாதுகாப்பு பணியில் 23000 காவல்துறையினர் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

sabarimalai, seithipunal

இந்த நிலையில், பக்தர்கள் கூட்டம் அலைமோதி வருவதால் பம்பையில் இருந்து சன்னிதானம் செல்லும் வரையில் ஏராளமான துப்புரவு தொழிலாளர்கள் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். அதில் தமிழகத்தைச் சேர்ந்தவர்களும் அந்த பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அவ்வாறு சபரிமலையில் துப்புரவு பணியை மேற்கொண்டிருந்த போது மதுரையை சேர்ந்த கணேசன் என்பவர் சன்னிதானத்தில் துப்புரவு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்தார். அப்போது அவருக்கு திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டது, நெஞ்சுவலியால் கணேசன் துடித்துக் கொண்டிருந்தார்.

Image result for sabarimalai seithipunal

அவரை, உடனடியாக சபரிமலை சன்னிதானத்தில் இருக்கும் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு முதலுதவி செய்யப்பட்டு, பின்னர் கணேஷன் கோட்டயத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால் கோட்டயம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கணேசன் உயிரிழந்தார்.

இதை தொடர்ந்து கணேசனின் உடல் ஐயப்பா சேவசங்கம் மூலம் அவரது சொந்த ஊரான மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதனால் சபரிமலை பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.


 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

death in sabarimalai temple


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->