எம்.புதூர் பட்டாசு ஆலை வெடிவிபத்தில் பலி எண்ணிக்கை 4ஆக உயர்வு.!! - Seithipunal
Seithipunal


கடலூர் மாவட்டம் எம் புதூர் பகுதியில் வானவேடிக்கை தயாரிக்கும் பட்டாசு ஆலை ஒன்று இயங்கி வந்தது. இந்த பட்டாசு ஆலையில் நேற்று திடீரென வெடி விபத்து ஏற்பட்டது.  இதில் அந்த அறை முழுவதும் தரைமட்டமானது. 

இந்த விபத்தில் பட்டாசுகள் வெடித்து சிதறியதில் நேற்று மூன்று பேர் உயிரிழந்தனர். மேலும் 2 பேர் படுகாயம் அடைந்தனர். அவர்களை மீட்டு கடலூர் அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். 

இதையடுத்து,  எம் புதூர் பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் உயிரிழந்த 3 பேரின் குடும்பத்த தலா 3 லட்சம் நிதி உதவி வழங்கப்படுவதாக முதலமைச்சர் மு க ஸ்டாலின் அறிவித்துள்ளார். 

இந்நிலையில், எம் புதூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. 3 பேர் உயிரிழந்த நிலையில், மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த வசந்தா (45) என்ற பெண் சிகிச்சை பலனின்றி கடலூர் அரசு மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

cuddalore m puthur fireworks blast 4 people death


கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?Advertisement

கருத்துக் கணிப்பு

இன்று வெளியான விருமன் திரைப்படம் எப்படி இருக்கிறது?
Seithipunal