சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை.! போலீசார் விசாரணை.! - Seithipunal
Seithipunal


ஐதராபாத்தில் சிஆர்பிஎப் கான்ஸ்டபிள் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

சத்தீஷ்கர் மாநிலத்தை சேர்ந்தவர் தேவேந்தர். இவர் தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (CRPF) கான்ஸ்டபிளாக பணிபுரிந்து வந்தார். இந்நிலையில் நேற்று அதிகாலை திடீரென தேவேந்தர் தனது துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த தேவேந்தர் உடலை கைப்பற்றிய பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இவர் கடந்த சில நாட்களாக மன உளைச்சலில் இருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில், இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து தேவேந்தர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் குறித்து பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CRPF constable commits suicide by shooting himself in Hyderabad


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?
Seithipunal
--> -->