பாஜக எம்எல்ஏ ஹார்திக் படேலை கைது செய்ய நீதிமன்றம் உத்தரவு.! - Seithipunal
Seithipunal


கடந்த 2017-ஆம் ஆண்டு நவம்பா் 26-ஆம் தேதி குஜராத் சட்டபேரைவைத் தேர்தலுக்காக திரங்காத்ரா கிராமத்தில் தோ்தல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் அனுமதி நிபந்தனைகளை மீறி பேசியதாக ஹாா்திக் படேல் மற்றும் கெளசிக் படேல் உள்ளிட்டோர் மீது குற்றச்சாட்டு எழுந்தது. 

அதனால், ஹாா்திக் படேல் மற்றும் கெளசிக் படேல் ஆகியோா் மீது திரங்காத்ரா தாலுகா காவல் நிலையத்தில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜனவரி 12-ஆம் தேதி வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதற்கிடையே, கடந்த 2019-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியில் இணைந்த ஹாா்திக் படேல், கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குஜராத் சட்டப்பேரவைத் தோ்தல் நேரத்தில் காங்கிரசில் இருந்து விலகி பாஜகவில் இணைந்தாா். 

மேலும், சட்டசபைத் தோ்தலில் பாஜக சாா்பில் அகமதாபாதில் உள்ள விரம்கம் தொகுதியில் போட்டியிட்டு எம்எல்ஏவாக தோ்ந்தெடுக்கப்பட்டாா். இருப்பினும், இவா் மீது குஜராத்தில் இரு தேசத் துரோக வழக்குகள் உள்பட இருபதுக்கும் மேற்பட்ட வழக்குகள் உள்ளன.

இந்த நிலையில், குஜராத் மாநிலத்தின் பாஜக எம்எல்ஏ ஹாா்திக் படேலுக்கு எதிராக சுரேந்திர நகா் மாவட்ட நீதிமன்றம் பிடி ஆணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, "அரசு உத்தரவை மீறி செயல்பட்ட குற்றச்சாட்டின் படி கடந்த 2017-ஆம் ஆண்டு பதிவு செய்யப்பட்ட வழக்கில் தொடா்ந்து நீதிமன்றத்தில் ஆஜராகாமல் இருந்த வந்த ஹாா்திக் படேலை, சுரேந்திரநகா் மாவட்டம் திரங்காத்ரா தாலுகா காவல் நிலைய அதிகாரி கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த உத்தரவை கூடுதல் தலைமை நீதித் துறை நடுவா் டி.டி.ஷா கடந்த 2-ஆம் தேதி பிறப்பித்துள்ளார். இந்த உத்தரவு நகல் கடந்த 11-ஆம் தேதி காவல் நிலையத்துக்கு வந்துதுள்ளது. அதனை அங்குள்ள போலீஸாா் உறுதி செய்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Court order arrest of gujarat BJP MLA Hardik Patel.


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்



Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்




Seithipunal
--> -->