இந்தியாவில் கொரோனா வைரஸ் நிலை என்ன? மத்திய அரசு சொல்வது என்ன?
Corona virus india Govt
இந்தியாவில் கொரோனா தொற்று மீண்டும் பரவத் தொடங்கியிருப்பதை அடுத்து, மக்களிடையே கவலை நிலவுகிறது. உலகளவில் சிங்கப்பூர், ஹாங்காங்க் உள்ளிட்ட நாடுகளில் தொற்று எண்ணிக்கை மீண்டும் அதிகரிப்பதும், அந்த அச்சத்தை வளர்த்துள்ளது.
இந்நிலையில், நாட்டில் பரவல் கட்டுப்பாட்டில் உள்ளதாகவும், மக்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என்றும் மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில், “இந்தியாவில் கொரோனா நிலைமை கண்காணிக்கப்பட்டு வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் 257 பேர் மட்டுமே புதிதாக தொற்றுக்கு ஆளாகியுள்ளனர். மேலும், பெரும்பாலானோருக்கும் லேசான அறிகுறிகளே காணப்படுகிறது. உயிருக்கு ஆபத்தான நிலையில் யாரும் இல்லை. நிலைமை முழுமையாக கட்டுக்குள் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், எல்லைகளிலும் மற்றும் முக்கிய விமான நிலையங்களிலும் பரிசோதனைகள் சீராக நடைபெற்று வருகின்றன. மாநிலங்களுக்கும் தேவையான வழிகாட்டுதல்கள் வழங்கப்பட்டுள்ளன. தடுப்பூசி இருப்புகள் போதுமானளவில் உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.