1,000 ரூபாய்க்கு கொரோனா தடுப்பூசி.. எப்போது கிடைக்கும்.!! சீரம் நிறுவனம் தகவல்.!! - Seithipunal
Seithipunal


உலகை உலுக்கி வரும் கொரோனா வைரஸை கட்டுப்படுத்த இங்கிலாந்தில் உள்ள ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகம் தடுப்பூசி ஒன்றை உருவாக்கி உள்ளது. இங்கிலாந்து அரசு மற்றும் அஸ்ட்ராஜெனேகா மருத்துவ நிறுவன உதவியுடன் உருவாக்கப்பட்டுள்ள இந்த தடுப்பூசி மிகவும் நம்பிக்கை அளிப்பதாக தெரிவித்துள்ளனர். 

இந்த தடுப்பூசியை இங்கிலாந்தில் மனிதர்களுக்கு செலுத்தி பார்க்கும் முதற்கட்ட பரிசோதனை வெற்றி அடைந்துள்ளது. உலக அளவில் மிகுந்த வரவேற்பைப் பெற்றுள்ள இந்த தடுப்பூசி, கொரோனாவில் இருந்து மீண்டு வர, வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த தடுப்பூசி இந்தியாவில் தயாரிக்க 100 கோடி டோஸ் வினியோகிப்பதற்கு இந்திய சீரம் இன்ஸ்டிடியூட் ஒப்பந்தம் செய்துள்ளது. 

ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட தடுப்பூசி நவம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் கிடைக்கும். இந்த தடுப்பூசி ரூபாய் 1000 விலையில் கிடைக்கும் என சீரம் இன்ஸ்டிடியூட் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சீரம் இன்ஸ்டிடியூட் ஆஃப் இந்தியாவின் தலைவர் கூறுகையில், இந்திய மக்கள் தொகையுடன் ஒப்பிட்டு சீரம் நிறுவனத்தின் தயாரிக்கப்படும் தடுப்பூசியில் பாதி பங்கு ஏற்றுமதி செய்யப்படும். அதாவது, ஒரு மாதம் தயாரிக்கப்படும் 60 கோடி டோஸ்களில், இந்தியாவுக்கு 3 கோடி  டோஸ்கள் கிடைக்கும். 

ஆகஸ்டில் இந்தியாவில் மூன்றாம் கட்ட பரிசோதனை செய்வதில் நாங்கள் நம்பிக்கை கொண்டுள்ளோம். இதன் முடிவுகள் தெரிய இரண்டு முதல் இரண்டரை மாதங்கள் ஆகும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

corona vaccine for 1000 rupees


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->