இந்தியாவில் இதுவரை கொரோனாவுக்கு இறந்தவர்கள் எத்தனை பேர் தெரியுமா?! - Seithipunal
Seithipunal


நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,168 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும், 58 பேர் கொரானாவுக்கு பலியாகியுள்ளனர்.

இது குறித்து மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்திருப்பதாவது,

"நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 6,168 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெறுபவா்களின் எண்ணிக்கை 59,210 ஆக உள்ளது.

மேலும், கடந்த 24 மணி நேரத்தில் 58  பேர் கொரோனாவால் உயிரிழந்துள்ளனர். இதனால், கொரோனாவில் இதுவரை உயிரிழந்தோர் எண்ணிக்கை 5,27,932 ஆக உள்ளது. இதன் விகிதம் 1.19 சதவீதம் ஆகும்.

கொரோனாவிலிருந்து மேலும் 9,685 போ் குணமடைந்துள்ளனா். இதுவரை 4,38,55,365 போ் கொரோனா தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனா். குணமடைந்தோர் விகிதம் 98.68 சதவீதமாக உள்ளது.

நாட்டில் இதுவரை 212.75 கோடி தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. நேற்று ஒரே நாளில் மட்டும் 22,40,162 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது". என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona update 2 sep 2022


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->