கொரோனா வைரஸ் தாக்கத்தால் சுகாதாரத்துறை அமைச்சர் கவலைக்கிடம்..! - Seithipunal
Seithipunal


டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் சமீபத்தில் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடும் காய்ச்சல், மூச்சு விடுவதில் சிரமம் காரணமாக சத்யேந்திர ஜெயின் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அதனை தொடர்ந்து அவருக்கும் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. அதில், அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டது.

கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்தர் ஜெயினுக்கு செயற்கை சுவாசம் அளிக்கப்பட்டு வருகிறது. சத்யேந்தர் ஜெயினின் நுரையீரலில் தொற்று அதிகரித்துள்ளதால், செயற்கை சுவாச உதவியுடன் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ள டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் ஜெயின் விரைவில் நலமடைய பிரார்த்திக்கிறேன் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona positive in delhi health minister


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal