தலைநகரில் மீண்டும் உயரத் தொடங்கிய கொரோனா தொற்று.!! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் கொரோனா பாதிப்பு கடந்த சில நாட்களாக வேகமாக அதிகரித்து வருகிறது. கடந்த திங்கள்கிழமை 137 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், நேற்று தொற்று பாதிப்பு 325 ஆக அதிகரித்துள்ளது. தொற்று விகிதம் 0.5 சதவிகிதத்தில் இருந்து 2.39 சதவீதமாக ஒரே வாரத்தில் அதிகரித்துள்ளது. 

காரோண தொற்று வேகமாக அதிகரித்து வந்தாலும், உயிரிழப்புகள் எதுவும் இல்லை. கொரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை அதிகரித்தாலும் மருத்துவமனையில் சேர்க்கப்படவர்கள் எண்ணிக்கை விகிதம் குறைவாகவே உள்ளது. இதனால் மக்கள் பீதியடைய வேண்டாம் என டெல்லி அரசு கேட்டுக்கொண்டுள்ளது. 

கொரோனா பரவலை உன்னிப்பாக கண்காணித்து வருவதாகவும், டெல்லி சுகாதாரத்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். தொற்று பாதிப்பு மளமளவென உயர்ந்து வருவதால் டெல்லி பேரிடர் மேலாண்மை ஆணையம் வருகின்ற 20ஆம் தேதி ஆலோசனை நடத்த உள்ளது. கொரோனா பரவலை எவ்வாறு கட்டுப்படுத்துவது குறித்து கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என தெரிவித்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

corona again increasing increasing in delhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->