18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியாக கார்பே வாக்ஸ் தடுப்பூசியை போடுவதற்கு மத்திய அரசு அனுமதி.! - Seithipunal
Seithipunal


18 வயதுக்கு மேற்பட்டோருக்கு பூஸ்டர் தடுப்பூசியாக கார்பே வாக்ஸ் தடுப்பூசியை போடுவதற்கு மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.

கடுமையான கொரோனா 2 ஆம் அலைக்கு பின்னர் கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த அரசு கோவேக்சின் மற்றம் கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்தும் திட்டத்தை மத்திய அரசு தீவிரப்படுத்தியது.

இதுவரை நாடு முழுவதும் மொத்தம் 193,96,47,071 தடுப்புசி டோஸ்கள் போடப்பட்டதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது.

இதனையடுத்து 12 வயது முதல் 14 வயதுக்குட்பட்டோருக்கான தடுப்பூசி  திட்டத்தை கடந்த மார்ச் மாதம் தொடங்கிய நிலையில் கொரோனா பூஸ்டர் டோஸ் செலுத்தும் பணி ஏப்ரல் 10ஆம் தேதி மத்திய அரசு தொடங்கியது.

இந்நிலையில் கோவேக்சின் மற்றம் கோவிஷீல்டு தடுப்பூசி தொடர்ச்சியாக ஹைதராபாத் பயாலஜிக்கல்-இ நிறுவனம் தயாரித்த கார்பேவாக்ஸ் தடுப்பூசி பயன்பாட்டுக்கு வந்த நிலையில் இந்த தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோஸ் தடுப்பூசியாக செலுத்துவதற்கு அனுமதி வழங்க கோரி இந்திய தலைமை மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகத்திடம் பயாலஜிக்கல்- இ நிறுவனம் விண்ணப்பித்திருந்தது.

இதையடுத்து தடுப்பூசியை தொழில்நுட்பக் குழு ஆய்வு செய்த நிலையில் கார்பேவாக்ஸ் தடுப்பூசியை 18 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் தடுப்பூசியாக வழங்க மருந்து கட்டுப்பாட்டு இயக்குனரகம் அனுமதி அளித்துள்ளது.

இதனால் இரண்டாவது டோஸ் ஆக கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் செலுத்தியவர்கள் 6 மாதங்களுக்குப் பின்னர் பூஸ்டர் டோஸ் ஆக கார்பேவாக்ஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Corbevax vaccine used as booster dose


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->