ஒரே போடு! தண்டனை அல்லது விடுதலை யூடியூப் வீடியோ அடிப்படையில் நிகழாது...! - நீதிமன்றம்
Conviction or acquittal not based YouTube video Court
கேரளாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் டி.பி. நந்தகுமார் என்பவர் அவருக்கு சொந்தமான யூடியூப் சேனலில், தன் நற்பெயரை கெடுக்கும் வகையிலும், அவதிமதிக்கும் வகையிலும் வீடியோ வெளியிட்டதாக, பிரபல பெண் அரசியல்வாதி ஒருவர் புகாரளித்திருந்தார். அந்த புகாரின் அடிப்படையில் காவலர்கள் வழக்குப்பதிவு செய்தனர்.

மேலும், இந்த வழக்கில் பத்திரிகையாளர் நந்தகுமார் முன்ஜாமின் கேட்டு கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். இந்த மனுவை கேரள மாநில நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.இதன் காரணமாக உச்சநீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனுதாக்கல் செய்திருந்தார்.
இந்த மனு பி.வி. நாகரத்னா, கே.வி. விஸ்வநாதன் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.அந்த சமயம்,நீதிபதிகள் தெரிவித்தது, "உங்களுடைய யூடியூப் வீடியோக்களை வைத்து மக்களை குற்றவாளிகளாக்க விரும்புகிறீர்காளா? தண்டனை அல்லது விடுதலை யூடியூப் வீடியோ அடிப்படையில் நிகழ்வதில்லை.
நீதிமன்றம் அதைச் செய்கிறது. யூடியூப்பில் நல்ல விசயங்களை சொல்லுங்க. இந்த குற்றத்தை ஏன் ஆன்லைனில் போடுகிறீர்கள்? கடவுளின் தேசமான கேரளாவில் நல்ல விஷயம் நடக்கிறது, அதைப் பற்றிப் பேசுங்கள்" என நீதிபதிகள் தெரிவித்துனர்.அத்துடன் இடைக்கால ஜாமின் வழங்கி நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
English Summary
Conviction or acquittal not based YouTube video Court