இந்தியாவுக்கு தொடர்ந்து நெருக்கடி ...நேட்டோ நாடுகளுக்கு அழைப்பு விடுத்த டிரம்ப் !
Continuous pressure on India Trump calls NATO countries
இந்தியாவுக்கு எதிரான நெருக்கடியை டிரம்ப் நிர்வாகம் தொடர்வது அம்பலமாகி இருக்கிறது.ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்கும் நாடுகளுக்கு வரி விதிக்குமாறு ஜி7 நாடுகளை அமெரிக்கா அறிவுறுத்தி உள்ளது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் பதவி ஏற்று கொண்டார். அவர் பதவியேற்று முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறார். குறிப்பாக அமெரிக்காவில் சட்ட விரோதமாக குடியேறியவர்களை நாடு கடத்தும் பணிகளை தீவிரமாக மேற்கொண்டார். அத்துடன் மட்டுமல்லாமல் பல்வேறு நாடுகளுக்கு வர்த்தக ரீதியிலான வரி விதிப்பை அதிகப்படுத்தி அதிர்ச்சி அடை செய்தார். இதனால் இந்த வரி விதிப்பால் உலக நாடுகள் அதிருப்திய அடைந்தனர்.
இதையடுத்து ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்காக இந்தியா மீது அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 25 சதவீத அபராதம் உள்பட இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரியை விதித்துள்ளார்.மேலும் ரஷியாவிடம் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்யும் இந்தியா மற்றும் சீனா மீது 100 சதவீத வரி விதிக்குமாறு ஐரோப்பிய நாடுகளுக்கு சமீபத்தில் டிரம்ப் வேண்டுகோள் விடுத்து இருந்தார்
இந்தநிலையில் அமெரிக்கா, கனடா, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, ஜப்பான், இங்கிலாந்து ஆகிய நாடுகளை கொண்ட இந்த அமைப்பின் நிதி மந்திரிகள் கூட்டம் நேற்று முன்தினம் நடந்தது. அப்போது உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டு வர ரஷியாவுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பது குறித்து விவாதிக்கப்பட்டது.
மேலும், அவர் வெளியிட்ட அறிக்கையில் இந்தியாவின் பெயரை நேரடியாக குறிப்பிடாவிட்டாலும், ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்கும் இந்தியாவையே அமெரிக்கா தொடர்ந்து குறிவைத்து இருக்கிறது. ஜி7 நாடுகளுக்கு விடுக்கப்பட்டுள்ள வரி அழைப்பும் இந்தியாவுக்கு எதிரானதாகவே கருதப்படுகிறது. இதன் மூலம் இந்தியாவுக்கு எதிரான அமெரிக்காவின் நடவடிக்கைகள் தொடர்வது அம்பலமாகி இருக்கிறது.
இதற்கிடையே ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நேட்டோ நாடுகள் நிறுத்தவேண்டும் என டிரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். அத்துடன் சீனா மீது வரி விதிக்குமாறும் அந்த நாடுகளை கேட்டுக்கொண்டுள்ளார்மேலும் அவர், ‘நேட்டோ உறுப்பினர்கள் சீனா மீது 50 முதல் 100 சதவீதம் வரை வரி விதிக்கவேண்டும்.’ என்றும் கூறியுள்ளார்.
English Summary
Continuous pressure on India Trump calls NATO countries