ஒப்பந்த விவகாரத்தில் காங்கிரஸ் தவறான தகவல் பரப்புகிறது...! - மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பதிலடி
Congress spreading false information contract issue Union Home Minister Amit Shah responds
இந்தியா சமீப காலமாக ஐரோப்பிய ஒன்றியம், இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளுடன் முக்கிய வர்த்தக ஒப்பந்தங்களை மேற்கொண்டுள்ளது. குறிப்பாக அமெரிக்காவுடன் செய்யப்பட்ட இடைக்கால வர்த்தக ஒப்பந்தம், இந்திய விவசாயிகளின் நலனை பாதிக்கக்கூடும் என எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்து வருகிறார்.

இந்த ஒப்பந்தம் “விவசாயிகளுக்கு எதிரான துரோகம்” என அவர் சமூக வலைதளத்தில் கருத்து வெளியிட்டிருந்தார்.இந்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த அமித் ஷா, ராகுல் காந்தி திட்டமிட்டு தவறான தகவல்களை பரப்புகிறார் என குற்றம்சாட்டினார்.
“விவசாயிகள் நலன் முழுமையாக பாதுகாக்கப்பட்டுள்ளது; தேவையற்ற பயத்தை உருவாக்க வேண்டாம்” என்று அவர் தெளிவுபடுத்தினார்.பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி எடுத்த நிலைப்பாட்டை பார்த்தால் சிரிப்பே வருகிறது என்ற அமித் ஷா, “நாட்டை தவறாக வழிநடத்துவதில் காங்கிரஸுக்கு நீண்ட வரலாறு உண்டு.
இப்போது வர்த்தக ஒப்பந்தங்களையும் அரசியல் ஆயுதமாக மாற்றி பொய்யான பிரச்சாரம் செய்கின்றனர்” என விமர்சித்தார்.மேலும், பிரதமர் நரேந்திர மோடி கையெழுத்திட்ட ஒவ்வொரு ஒப்பந்தத்திலும் விவசாயிகள், கால்நடை வளர்ப்பவர்கள், மீனவர்கள் உள்ளிட்டோரின் நலன்கள் முன்னுரிமை பெற்றுள்ளன என்றும் உறுதியளித்தார்.
குறிப்பாக பால்வளத் துறையை பாதிக்காமல், அதை விரிவுபடுத்தும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.அதே சமயம், “யார் உண்மையில் விவசாயிகளுக்கு தீங்கு செய்தார்கள்? யார் அவர்களின் நலனுக்காக உழைத்தார்கள்? எந்த மேடையிலும் விவாதிக்க தயார்” என்று ராகுல் காந்திக்கு நேரடி சவாலும் விடுத்தார்.
இதனால், வர்த்தக ஒப்பந்தங்களைச் சுற்றிய விவசாயிகள் நலன் விவகாரம் அரசியல் மேடையில் புதிய விவாதத்தை கிளப்பியுள்ளது.
English Summary
Congress spreading false information contract issue Union Home Minister Amit Shah responds