மோடியை கொலை செய்ய வேண்டும் என பேசிய காங்கிரஸ் தலைவர் ராஜா பட்டேரியா கைது..!! - Seithipunal
Seithipunal


மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜா பட்டேரியா "பிரதமர் மோடி மதம், சாதி, மொழியின் பெயரால் பிளவுபடுத்துபவர். தலித்துகள், பழங்குடியினர், சிறுபான்மையினர் எதிர்காலம் ஆபத்தில் உள்ளது. நீங்கள் அரசியல் சாசனத்தை காப்பாற்ற வேண்டும் என்று விரும்பினால், மோடியைக் கொல்வதற்கு தயாராகுங்கள். மோடியை வீழ்த்துவதாக கருதி கொல்லுங்கள்" என பேசி இருந்தார். அவர் பேசிய வீடியோ நேற்று சமூக வலைத்தளங்களில் வெளியாகி வைரலானது. நாட்டின் பிரதமரை ஒரு மாநிலத்தின் முன்னாள் அமைச்சரே கொல்லுமாறு அழைப்பு விடுத்தது பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி இருந்தது.

இந்த நிலையில் ராஜா பட்டேரியா தன்னிலை விளக்கம் அளித்து ஒரு வீடியோவை வெளியிட்டார். அதில் "பவாயில் நடந்த கூட்டத்தில் பேசியது தொடர்பான வீடியோ வெளியாகி உள்ளது. நான் மகாத்மா காந்தியைப் பின்பற்றுபவன். நான் யாரையும் கொல்ல வேண்டும் என்று கூற மாட்டேன். அரசியல் சாசனத்தையும், தலித்துகளையும், பழங்குடியினரையும், சிறுபான்மையினரையும் பாதுகாக்க மோடியை வீழ்த்துங்கள் என்றுதான் நான் பேசினேன்" என விளக்கம் அளித்திருந்தார்.

இந்த நிலையில் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ராஜா பட்டேரியாவை கைது செய்யுமாறு பன்னா காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அந்த புகார் மனுவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் ராஜா பட்டேரியாவை கைது செய்துள்ளனர். இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள மத்திய பிரதேச முதல்வர் சிவராஜ் சவுகான் "இந்திய ஒற்றுமை யாத்திரை நடத்துவோரின் உண்மை முகம் வெளிவந்துவிட்டது" என விமர்சனம் செய்துள்ளார். 

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Congress leader Raja Bhateria arrested for saying wanted to kill Modi


கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்து - முஸ்லிம் பிரிவினையை ஒருபோதும் செய்யமாட்டேன். அவ்வாறு செய்தால் நான் பொதுவாழ்க்கைக்கு தகுதியற்றவனாக மாறிவிடுவேன் என்று பிரதமர் மோடி கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->