"2 ரூபாய் பதிவு"  மத்திய அமைச்சரை தாக்கிய காங்கிரஸார்.!  - Seithipunal
Seithipunal


சட்டத்துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு, ராகுல் காந்தி மீது கடுமையான விமர்சனங்களை வைத்திருக்கிறார் .

ராகுல் காந்தி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரையை தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள கிரண். நாட்டின் ஒற்றுமைக்கு மிகவும் ஆபத்தானவர் ராகுல் காந்தி என பதிவிட்டுள்ளார். இந்தப் பதிவு காங்கிரஸ் தரப்பில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியினர் கிரண் ரிஜிஜு அவமானகரமானவர் என பதிவிட்டு வருகின்றனர்.

சமீபத்தில் இங்கிலாந்துக்கு சுற்றுப்பயணம் சென்றிருந்த ராகுல் காந்தி அங்குள்ள பாராளுமன்றம் மற்றும் கேம்பிரிட்ச் பல்கலைக்கழகத்தில், இந்திய பிரதமர் மோடி மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்பினர் மற்ற மதத்தினரை இரண்டாம் தர குடிமக்களை நடத்துவது போல் நடத்துவதாக  உரையாற்றினார். இந்த உரையை மேற்கோள் காட்டி பதிவிட்டுள்ள கிரண் ரிஜிஜு இந்தியாவின் ஒற்றுமைக்கு ஆபத்தானவர் ராகுல் காந்தி என தெரிவித்துள்ளார். மேலும் அவர் பப்பு என்று இங்கிலாந்து மக்களுக்கு தெரியாது எனவும் கடுமையாக குற்றம் சாட்டி இருக்கிறார்.

இது காங்கிரஸ் கட்சியினரிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள காங்கிரஸ் கட்சியின் முன்னாள் அமைச்சர்  ஜெய் ராம் ரமேஷ் சட்ட அமைச்சரின் பதிவு இரண்டு ரூபாய் மதிப்புள்ள பதிவு என கடுமையாக விமர்சித்துள்ளார். காங்கிரஸ் எம்பி மாணிக் தாகூர்  மோடியின் அமைச்சரவையில் ஒரு முஸ்லிமையோ அல்லது கிறிஸ்தவரையோ காட்ட முடியுமா என கேள்வி எழுப்பியுள்ளார். சட்ட அமைச்சரின் பதிவு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு ஏற்படுத்தி இருக்கிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

congress hits back at law minister for his comments about rahul gandhi


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->