'சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும்; ஆனால் யாருக்கும் அடிபணியாது': வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் திட்டவட்டம்..!
Commerce Minister Piyush Goyal has said that India will not bow to anyone
ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் அமெரிக்க அதிபர் டிரம்ப், அதற்காக வரியும், அபராத வரியும் சேர்த்து 50 வீதம் வரி விதித்துள்ளார். இதன்காரணமாக சர்வதேச அளவில் தொழில் மற்றும் வர்த்தக துறையினர் மத்தியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், இந்தியா யாருக்கும் அடிபணியாது என மத்திய வர்த்தகத்துறை அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார். இந்த விவகாரம் குறித்து, இந்தியா - அமெரிக்கா இடையிலான வர்த்தக ஒப்பந்த பேச்சில் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் பற்கேற்றுள்ளார்.
இதனை தொடர்ந்து, அவர் கூறியதாவது: இந்தியா யாருக்கும் அடிபணியாது என்றும், கோவிட்-19 போன்ற நெருக்கடியை நாடு ஒரு வாய்ப்பாக மாற்றி ஐடி துறையில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கியது. அதேப்போல சவாலான காலங்களில் இந்தியா எப்போதும் வெற்றி பெறும் என்று தெரிவித்துள்ளார்.
அத்துடன், உலகெங்கிலும் உள்ள நாடுகள் மறுசீரமைக்கப்பட்டு புதிய வர்த்தக கூட்டாளிகளைத் தேடுகின்றன. கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு இந்தியா அதிகமாக ஏற்றுமதி செய்யும் என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இன்று இந்தியா வலுவானது மற்றும் அதிக மரியாதைக்குரிய நாடு. இந்தியா புதிய வர்த்தக ஏற்பாடுகளை தொடர்ந்து உருவாக்கும் என்றும் பேசியுள்ளார்.
மேலும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், மொரீஷியஸ், ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பிய ஒன்றியம், சிலி, பெரு, நியூசிலாந்து மற்றும் இன்னும் பல நாடுகள் உட்பட பலதரப்பட்ட கூட்டாளிகளுடன் இந்தியா வர்த்தக ஒப்பந்தங்களைத் தொடர்கிறதோடு, மேலும் வர்த்தக ஒப்பந்தங்களை இறுதி செய்து வருகிறதாக வும் மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் கூறியுள்ளார்.
English Summary
Commerce Minister Piyush Goyal has said that India will not bow to anyone