செக் மோசடி வழக்கு - பிரபல இயக்குநருக்கு 3 மாதம் சிறை தண்டனை..சினிமா வட்டாரத்தில் பரபரப்பு ! - Seithipunal
Seithipunal


செக் மோசடி வழக்கில் பிரபல இயக்குநர் ராம் கோபால் வர்மாவுக்கு மும்பை நீதிமன்றம் பிணையில் வெளிவர முடியாத வகையில் 3 மாத சிறை தண்டனை வழங்கியுள்ளது சினிமா வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

2018ல் காட் செக்ஸ் அண்ட் ட்ரூத் எனும் ஆபாச படத்தை இயக்கி ஒட்டுமொத்த சினிமா துறையையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியவர் இயக்குனர் ராம் கோபால் வர்மா.சர்ச்சைக்கு மிகவும் பெயர் போன இவர் நடிகர் நாகார்ஜுனாவை வைத்து தெலுங்கில் 1989ம் ஆண்டு இவர் இயக்கிய சிவா திரைப்படம் இவருக்கு மிகப்பெரிய வெற்றியை கொடுத்தது என்பது அனைவரும் அறிந்தது. மேலும் தெலுங்கில் இருந்து பாலிவுட்டுக்கு சென்று சிவா படத்தை ரீமேக் செய்திருந்தார்.அதன் பின்னர், ரங்கீலா, சத்யா, ஜங்கிள், கம்பெனி, பூத் என ஏகப்பட்ட ஹிட் படங்களை இயக்கிய ராம் கோபால் வர்மா சூர்யா நடித்த ரத்த சரித்திரம் 2ம் பாகத்தையும் இயக்கி ,அமிதாப் பச்சனை வைத்து சர்க்கார் படத்தை இயக்கி உள்ளார். 

கடந்த 2018ம் ஆண்டு ராம் கோபால் வர்மா மீது செக் பவுன்ஸ் வழக்கு தொடரப்பட்டது. மகேஷ் சந்திர மிஷ்ரா என்பவர் ஶ்ரீ என்கிற நிறுவனத்தின் மூலம் இந்த வழக்கைத் தொடர்ந்த நிலையில்  5000 ரூபாய் பிணைத் தொகையாக செலுத்தி இந்த வழக்கில் இருந்து ஜாமினில் வெளிவந்தார் ராம் கோபால் வர்மா. 

இந்தநிலையில் கடந்த ஏழு ஆண்டுகளாக நிலுவையில் இருந்து வரும் இவ்வழக்கின் இறுதி விசாரணை கடந்த 21ம் தேதி நடைபெற்றது. இந்த விசாரணையில் ராம் கோபால் வர்மா ஆஜராகாத காரணத்தினால் நீதிபதி அவருக்கு 3 மாதம் நான் பிணையில் வெளிவர முடியாத சிறை தண்டனை வழங்கினார். இதையடுத்து கூடுதலாக மனுதாரருக்கு ராம் கோபால் வர்மா ரூ 3.72 லட்சம் செலுத்த வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இந்த தொகையை செலுத்த முடியாத பட்சத்தில் கூடுதலாக 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இந்த வழக்கு பிணையில் வெளிவர முடியாத வழக்காக இது அமைந்துள்ள நிலையில், ராம் கோபால் வர்மாவை போலீஸார் கைது செய்ய நேரிடும் என்கிற சூழல் உருவாகியுள்ளது.ஏற்கனவே முதல்வர் சந்திரபாபு நாயுடு, அவரது குடும்பத்தினர் மற்றும் ஜனசேனா தலைவர் பவன் கல்யாண் ஆகியோரை இழிவுபடுத்தும் விதத்தில் அவர்களது புகைப்படங்களை மார்பிங் செய்து ஆபாசமாக சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு வழக்கில் ராம் கோபால் வர்மா சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cheque bounce case: Popular director sentenced to 3 months in jail Sensation in the film circle


கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!



Advertisement

கருத்துக் கணிப்பு

மத்திய அரசின் பட்ஜெட் அறிவிப்புகள்!




Seithipunal
--> -->