இனி "ரத்தம் விற்பனைக்கு அல்ல"... மத்திய அரசு போட்ட அதிரடி உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் தனியார் மருத்துவமனைகள் மற்றும்  ரத்த வங்கிகளில் 1 யூனிட் ரத்தம் 2,000 ரூபாய் முதல்  6,000 ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது. தேவைப்படும் ரத்தத்துக்கு ஈடாக, நோயாளிகள் தரப்பில் இருந்து ரத்த தானம் செய்யப்பட்டால், இந்த கட்டணங்களில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனாலும் செயல்பாட்டு கட்டணம் வசூலிக்கப்படுகின்றன. தலசீமியா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் மாதத்துக்கு இருமுறை ரத்த மாற்று செய்து கொள்கிறார்கள். அதேபோன்று அறுவை சிகிச்சை மேற்கொள்ள உள்ளவர்களுக்கும் ரத்தம் தேவைப்படுகிறது.

அவசர தேவைகளின் போது ரத்தத்தை பெறுவதற்கு தனியார் மருத்துவமனை மற்றும் ரத்த வங்கிகளால் அதிக கட்டணம் வசூலிப்பதற்கு முடிவு கட்டும் வகையில் ரத்தம் வழங்க கட்டணம் வசூலிக்கக் கூடாது என சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. இது தொடர்பாக, தேசிய ரத்த மாற்று கவுன்சில் வெளியிட்டுள்ள திருத்தப்பட்ட வழிகாட்டுதல்கள், அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன. 

இந்த புதிய வழிகாட்டுதல்களை பின்பற்றும்படி, மத்திய மருந்துகள் தரக் கட்டுப்பாட்டு அமைப்பு அறிவுறுத்தியுள்ளது. அதில் தனியார் மருத்துவமனைகள் மற்றும் ரத்த வங்கிகள் ரத்தத்துக்கு கட்டணம் வசூலிக்க கூடாது எனவும், அதே வேளையில் செயல்பாட்டு கட்டணங்களை மட்டுமே  வசூலிக்க வேண்டும் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central govt order No more Blood for sale


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->