மாநில அரசுகளுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் எழுதிய கடிதம்.. வெளியாகப்போகும் உத்தரவு.!! - Seithipunal
Seithipunal


இந்தியாவில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. கொரோனா பரவலை தடுப்பதில் பரிசோதனைகள் முக்கிய இடம் வகிக்கிறது. இதனால் தொற்று பாதிப்பு விரிவாக கண்டறியப்பட்டு, தனிமைப் படுத்தப் படுகின்றனர். இது பரவலாக தடுக்கிறது. 

ஆனால் சில மாநிலங்களில் கொரோனா பரிசோதனை குறைந்துள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதையடுத்து, மாநிலங்கள் கொரோனா பரிசோதனை அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. இதுகுறித்து மாநிலங்களுக்கு மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் கூடுதல் செயலாளர் ஆர்த்தி அகுஜா எழுதிய கடிதத்தில், குறிப்பிட்ட பகுதியில் தொற்று பாதிப்பு அதிகரிக்கும் போக்கை கருத்தில் கொண்டு பரிசோதனைகளை அதிகரிக்க உடனடியாக கவனம் செலுத்த வேண்டும். 

கொரோனாக்கு எதிரான பரிசோதனைகள் முக்கிய அங்கமாக உள்ளது. ஆனால் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் தளத்தை பார்க்கிற போது பல மாநிலங்களிலும், யூனியன் பிரதேசங்களிலும் கொரோனா பரிசோதனைகள் குறைந்துள்ளது தெரியவந்துள்ளது.

நோய்த்தொற்று மேலாண்மையில் ஒரு முக்கிய உத்தியாக கொரோனா பரிசோதனை உள்ளது. ஏனெனில் புதிய தொற்றுநோய் ஆபத்தை  அடையாளம் காண உதவுகிறது. இது கட்டுப்பாட்டு மண்டலங்களை அமைத்தல், தொடர்பும் அறிதல், தனிமைப்படுத்துதல், பின்தொடர்தல் போன்றவற்றில் உதவியாக பரிசோதனை உள்ளதென தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

central govt letter for corona test


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->