சிகரெட், புகையிலை பொருள்களை பயன்படுத்துவோருக்கு இனி ஆப்பு.! புதிய சட்டம் கொண்டுவரும் மத்திய அரசு.! - Seithipunal
Seithipunal


சிகரெட் உள்ளிட்ட புகையிலை பொருள்களை பயன்படுத்துவோரின் வயது வரம்பை 18 வயதிலிருந்து 21ஆக அதிகரிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இந்தியாவில் 18 வயது நிரப்பிய நபர்கள் மட்டுமே புகையிலை பொருள்களை பயன்படுத்துவதற்கு சட்டரீதியில் அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், மத்திய சுகாதார அமைச்சகத்தால் அமைக்கப்பட்ட குழு, அந்த வயது வரம்பை 18 வயதிலிருந்து 21ஆக அதிகரிக்க வேண்டும், பேருந்து நிலையம், மருத்துவமனை உள்ளிட்ட பொது  இடங்களில் விதியை மீறி புகைபிடிக்கும் நபர்களுக்கு விதிக்கப்படும் அபராதத்தை அதிகரிக்க வேண்டும் என உள்ளிட்ட பரிந்துரைகளை அந்த குழு அளித்துள்ளது.

இந்த பரிந்துரைகள் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் பரிசீலித்து வருவதாகவும், விரைவில் இது தொடர்பான சட்டத்தில் திருத்தங்கள் செய்து அமல்படுத்தப்பட உள்ளதாக மத்திய சுகாதார அமைச்சக மூத்த அதிகாரி தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

central government introduce new act smoking


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->