அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 10 நாட்களுக்குள் அரசு பங்களா வழங்கப்படும்: மத்திய அரசு உறுதி..! - Seithipunal
Seithipunal


ஆம் ஆத்மி தேசிய ஒருங்கிணைப்பாளர் அரவிந்த் கெஜ்ரிவால் டெல்லி சட்டசபை தோல்விக்கு பிறகு முதலமைச்சர் பதவியில் இருந்து விலகினார். அதனையடுத்து, கடந்த ஆண்டு கெஜ்ரிவால் தனது அதிகாரப்பூர்வ இல்லத்தை காலி செய்தார். 

அப்போது முதல் அவர் மண்டி ஹவுசுக்கு அருகில் உள்ள தனது கட்சி எம்.பி.யின் ஒருவரின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் தங்கியுள்ளார். டெல்லி முதலமைச்சராக இருந்த கெஜ்ரிவாலுக்கு அரசு பங்களா ஒதுக்க மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி ஆம் ஆத்மி கட்சி கட்சி சார்பில் டெல்லி உயர் நீதிமன்றில் மனுதாக்கல் செய்யப்பட்டது. குறித்த மனு மீது மத்திய அரசு பதிலளிக்க டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இந்நிலையில் ஆம் ஆத்மி தாக்கல் செய்த மனு டெல்லி உயர் நீதிமன்றம் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆம் ஆத்மி தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் ராகுல் மெஹ்ரா வாதிடும் போது குறிப்பிட்டதாவது: 'கடந்த காலங்களில் கெஜ்ரிவாலுக்கு வழங்கப்பட்ட அரசு பங்களா தரம் குறைந்ததாக இருந்தது போல் இருக்க கூடாது' என குறிப்பிட்டார்.

இதற்கு நீதிபதி 'ஒதுக்கப்பட்ட அரசு பங்களாவில் திருப்தி இல்லை என்றால், ஆம் ஆத்மி கட்சி அரசை அணுக சுதந்திரம் உண்டு' என்று தெரிவித்தார். இதையடுத்து காணொலி காட்சி மூலம் மத்திய அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா தெரிவித்துள்ளதாவது:

10 நாட்களுக்குள் கெஜ்ரிவாலுக்கு பொருத்தமான அரசு பங்களா ஒதுக்கப்படும் என்றும், நீங்கள் எனது உறுதிமொழியை பதிவு செய்யலாம் என உறுதி அளித்துள்ளார். அதன் பின்னர் நீதிபதி தன்னுடைய உத்தரவில் குறிப்பிட்டுள்ளதாவது:

'மத்திய அரசின் உறுதிமொழியை பதிவு செய்து விட்டதாகவும்,  உத்தரவை பின்னர் அறிவிப்பதாகவும், ஒதுக்கீடு தொடர்பான அமைச்சகத்தின் நடைமுறை கவனிக்கப்பட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார். இந்த முறை அரசியல்வாதிக்கு மட்டுமல்ல, அரசியல்வாதி அல்லாதவர்களுக்கும் இது தீர்க்கப்பட வேண்டிய ஒரு பிரச்சினை என்று நீதிபதி தெரிவித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Central government assures Arvind Kejriwal that he will be given a government bungalow within 10 days


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->