ரெயில்வே ஊழியர்களுக்கு குட் நியூஸ்... தீபாவளி போனஸ் அறிவித்த மத்திய அரசு - எவ்வளவு தெரியுமா?
central government announce deepavali bonous to railway department employees
ஒவ்வொரு ஆண்டும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மத்திய அரசு ஊழியர்களுக்கு போனஸ் வழங்கப்படுவது வழக்கம். அதன் படி இந்த ஆண்டு தீபாவளி பண்டிகை அடுத்த மாதம் 20-ம் தேதி கொண்டாடப்படுகிறது. இதனை முன்னிட்டு, ரெயில்வே ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாட்கள் ஊதியத்தை போனஸாக வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டது. இது தொடர்பாக, வெளியான அறிவிப்பில் தெரிவிக்கப் பட்டுள்ளதாவது:-
"ரெயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்தை போனஸாக வழங்க அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இதன் மூலம் 10.9 லட்சம் ஊழியர்கள் பயன்பெறுவர். இதனால் அரசுக்கு ரூ.1,866 கோடி செலவாகும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
central government announce deepavali bonous to railway department employees