ஒடிசா ரயில் விபத்து || ரயில்வே ஊழியர்கள் 3 பேரை கைது செய்தது CBI.!! - Seithipunal
Seithipunal


ஒடிசா மாநிலம் பாலசோர் மாவட்டத்தில் சரக்கு ரயில் மீது கோரமண்டல் எக்ஸ்பிரஸ் ரயில் மற்றும் ஹவுரா எக்ஸ்பிரஸ் ரயில் மோதிய விபத்தில் 293 பேர் உயிரிழந்த நிலையில் 1000க்கும் மேற்பட்டோர் இந்த விபத்தால் பாதிக்கப்பட்டனர்.

இந்த விபத்து தொடர்பாக மத்திய ரயில்வே துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவி ராஜினாமா செய்ய வேண்டும் என எதிர்கட்சிகள் கோரிக்கை வைத்த நிலையில் இந்த வழக்கு சிபிஐ வசம் ஒப்படைக்கப்பட்டது. ரயிலை விபத்து ஏற்படுத்தும் நோக்கில் சதி செயல் ஏதேனும் காரணமா என்ற கோணத்தில் சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர்.

இந்த நிலையில், மரணத்தை உண்டாக்கும் நோக்கில் செயல்பட்டதோடு, ஆதாரங்களை அழித்த குற்றச்சாட்டில் மூன்று ரயில்வே அதிகாரிகளை சிபிஐ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சிபிஐ அதிகாரிகள் நடத்திய விசாரணையில் மனித தவறால் இந்த விபத்து ஏற்பட்டிருந்தாலும் அவர்களின் செயல் விபத்தை ஏற்படுத்தும் நோக்கில் இருந்ததாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது.

அதன்படி இந்த ரயில் விபத்திற்கு மூத்த செக்ஷன் இன்ஜினியர் அருண் குமார், மொஹந்தா, செக்ஷன் இன்ஜினியர் முகமது அமீர் கான், டெக்னீஷியன் பப்பு குமார் ஆகியோரின் அலட்சியப் போக்ககே காரணம் என தெரிய வந்ததை அடுத்து 3 பேரை சிபிஐ அதிகாரிகள் சிபிஐ பிரிவு 304 மற்றும் 201 கீழ் தற்போது கைது செய்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

CBI arrests 3 railway workers in Orissa train accident


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->