லாரி மீது மோதிய கார்: குழந்தைகள் உள்பட 7பேர் உடல் கருகி உயிரிழந்த பரிதாபம்.! - Seithipunal
Seithipunal


ராஜஸ்தானில் லாரி மீது கார் மோதி தீப்பிடித்து எரிந்ததில் இரண்டு குழந்தைகள் உள்பட 7 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

உத்திர பிரதேசம், மீரட் பகுதியில் சேர்ந்தவர்கள் சலாசர் பாலாஜி கோவிலில் இருந்து இன்று, ஹிசார் நோக்கி காரில் சென்று கொண்டிருந்தனர். 

கார் அர்ஷிவாத் புலியா அருகே சென்று கொண்டிருந்தபோது முன்னாள் சென்ற லாரியின் மீது மோதியது. இதில் கார் தீப்பிடித்து எரிந்ததில் காரில் பயணித்த 3 பெண்கள், 2 குழந்தைகள் உள்பட 7 பேர் பரிதாபமாக உயிரிழந்த விட்டனர். 

கார் திடீரென தீப்பிடித்து எரிய தொடங்கியதால் கார் கதவு திறக்க முடியாமல் அனைவரும் உயிருடன் எரிந்தனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார், தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டு பலியானவர்களை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர். 

மேலும் இந்த விபத்து தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

car collided lorry 7 people death


கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

ஐபில் போட்டியில் பெங்களூரு அணி பிளே ஆஃப் சுற்றுக்குள் நுழைந்திருப்பதற்கு காரணம்
Seithipunal
--> -->