#BREAKING || 7 சட்டமன்ற தொகுதிகளுக்கு செப்.5ல் இடைத்தேர்தல்.! தேர்தல் ஆணையம் அறிவிப்பு.!
Byelections for 7 assembly constituencies on September5
இந்திய தேர்தல் ஆணையம் சற்று முன்பு 6 மாநிலங்களில் உள்ள 7 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் தேதி அறிவித்துள்ளது. அதன்படி ஜார்க்கண்ட் மாநிலம் துமோரி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த ஜெகன்நாத் மோத்டோ, கேரள மாநிலம் புதுப்பள்ளி சட்டமன்ற உறுப்பினரும் முன்னாள் முதலமைச்சருமான உமன் சாண்டி, திரிபுரா மாநிலம் பாக்சா நகர் சட்டமன்ற உறுப்பினர் சாமுவேல் ஆக்கோ,
மேற்குவங்க மாநிலம் துப்கிரி சட்டமன்ற உறுப்பினர் பிஷ்ணு பாடா ராய், உத்தரகாண்ட் மாநிலம் பகீஸ்வர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் சந்திரன் ராமதாஸ் ஆகியோர் மறைவு காரணமாகவும், திரிபுரா மாநிலம் தன்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் பாத்திமா பூமிக், மற்றும் உத்திர பிரதேஷ் மாநிலம் ஜோஷி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் தர்ன் சிங் சவுகான் ஆகியோர் ராஜினாமா செய்ததை ஒட்டி இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள தேர்தல் அட்டவணையின் படி வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி முதல் வேட்புமானு தாக்கல் தொடங்குகிறது, ஆகஸ்ட் 17 வேட்டுமனு தாக்கல் செய்ய கடைசி தேதியாகும், ஆகஸ்ட் 18ஆம் தேதி வேப்பமனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு, வேட்பு மனுக்கள் வாபஸ் பெற ஆகஸ்ட் 21ஆம் தேதி கடைசி நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதனைத் தொடர்ந்து அன்று மாலை இறுதி வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டு செப்டம்பர் 5ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. அன்று பதிவாகும் வாக்குகள் செப்டம்பர் 8ம் தேதி எண்ணப்படுகிறது. செப்டம்பர் 10ம் தேதிக்கு முன்பு அனைத்து தேர்தல் பணிகளும் நிறைவடையும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
English Summary
Byelections for 7 assembly constituencies on September5