இளம் வயதிலேயே ரூ.1000 கோடி சொத்து சேர்த்த தொழிலதிபர்கள்.! - Seithipunal
Seithipunal


2022-ஆம் ஆண்டுக்கான இந்தியாவில் கோடீஸ்வரர்கள் பட்டியலை ஐ.ஐ.எப்.எல். வெல்த் மற்றும் ஹாரூன் நிறுவனம் வெளியிட்டுள்ளது.

இதில், மளிகை பொருட்கள் வாங்குவதற்கு பரவலாக பயன்படுத்தப்படும் செப்டோ செல்போன் செயலியின் நிறுவனர்களான கைவல்யா வோரா மற்றும் ஆதித் பலிச்சா ஆகிய இளம் தொழில் முனைவோர்கள் கோடீஸ்வரர்கள் பட்டியலில் மிக முக்கியமான இடத்தை பிடித்துள்ளனர். 

இந்த பட்டியலில் கைவல்யா தனது 19 வயதிலேயே ரூ.1,000 கோடி நிகர சொத்து மதிப்புடன் பட்டியலில் 1,036-வது இடத்தில் உள்ளார். செப்டோவின் மற்றொரு இளம் நிறுவனரான ஆதித் பலிச்சா தனது 20 வயதிலேயே ரூ.1,200 கோடி சொத்து மதிப்புடன் 950-வது இடத்தை பிடித்துள்ளார்.  

மேலும் கைவல்யா வோரா, ஆதித் பலிச்சா ஆகிய இருவரும் சிறு வயது முதலே நண்பர்கள் ஆவார். இவர்கள் புகழ்பெற்ற ஸ்டான்போர்டு பல்கலைக்கழகத்தில் படித்துக் கொண்டிருக்கும்போதே, தொழில் முனைவோராக வேண்டும் என்ற எண்ணத்தில் இருவரும் இந்தியா திரும்பினர். 

இதையடுத்து கடந்த 2020-ம் ஆண்டு செப்டோ நிறுவனத்தை தொடங்கினர். இந்நிலையில் கொரோனா சமயத்தில் மளிகை பொருட்கள் வாங்க பொதுமக்கள் சிரமப்படுவதை கண்ட இருவரும் செப்டோ நிறுவனத்தின் மூலமாக மளிகை பொருட்களை ஆன்லைன் டெலிவரி செய்ய நினைத்து செய்த நடவடிக்கைகள் நிறுவனத்தை இந்த அளவுக்கு உயர்த்தி உள்ளது. 

மேலும் இருவரும் சேர்ந்து தொடங்கிய இந்த நிறுவனம் 2 ஆண்டுகளில் மிகப்பெரிய உயரத்தை அடைந்திருப்பது உலகில் பலரையும் ஆச்சிரப்படுத்தியுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Businessmen accumulated a 1000 crores of wealth at a young age


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->