டெல்லியில் அபாய நிலைக்கு மாறிய காற்று மாசுபாடு - கட்டுமானப் பணிகளுக்கு தடை.!  - Seithipunal
Seithipunal


சமீப நாட்களாகவே இந்தியாவின் தலைநகர் டெல்லி முழுவதும் காற்றின் தரம் தொடர்ந்து மோசமடைந்து வருகிறது. கடந்த சில தினங்களை ஒப்பிட்டு பார்க்கும் போது, நேற்று காலை நிலவரப்படி டெல்லியின் காற்றின் தரக் குறியீடு 407 என்ற அளவில் பதிவாகி மிகவும் மோசமடைந்துள்ளது.

இதன் காரணமாக, டெல்லியில் வாகனங்களை இயக்குவதற்கும், மக்கள் சுவாசிப்பதற்கும் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, டெல்லி மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதிகளில் ஏற்பட்டுள்ள காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கு காற்றின் தர மேலாண்மை ஆணையம் தீவிர நடவடிக்கைகளில் எடுத்துவருகிறது. 

அந்த வகையில், டெல்லியில் புதிய நாடாளுமன்ற கட்டிடத்தின் கட்டுமானப் பணி மற்றும் தேச நலனுக்கான அத்தியாவசிய கட்டிடத்தின் கட்டுமான பணிகள் தவிர மற்ற கட்டுமானப் பணிகளை தொடர்ந்து செயல்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

அதேசமயம், மெட்ரோ ரயில் சேவை பணிகள், விமான நிலையம் மற்றும் மாநிலங்களுக்கு இடையேயான பேருந்து முனையங்கள் சார்ந்த கட்டுமான பணிகள்; ரயில் சேவைகள் மற்றும் நிலையங்கள் சார்ந்த கட்டுமான பணிகள், தேசிய பாதுகாப்பு தொடர்பான நடவடிக்கைகள் சார்ந்த கட்டுமான பணிகள், மருத்துவமனைகள் கட்டுமான பணிகள் உள்ளிட்ட சில முக்கிய பணிகளுக்கு இந்த தடை உத்தரவு பொருந்தாது.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

building contract work stop in delli for airpolution


கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்தியா கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமர் பதவி வகிப்பார் என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->