ஆண்டின் முதல் பட்ஜெட் கூட்டத் தொடர் - எப்போது தெரியுமா? - Seithipunal
Seithipunal


ஒவ்வொரு வருடமும் மூன்று முறை பாராளுமன்றம் கூடுகிறது. இதில் பட்ஜெட் கூட்டத்தொடர் ஆண்டின் தொடக்க கூட்டத்தில் நடந்து வருகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் பட்ஜெட் கூட்டத்தொடர் வருகிற 31-ந்தேதி தொடங்கும் என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்து உள்ளன. 

இது ஆண்டின் முதல் பாராளுமன்ற கூட்டத்தொடர் என்பதால் பட்ஜெட் தொடரின் முதல் நாளில் இரு அவைகளின் கூட்டுக்கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
பின்னர் பொருளாதார ஆய்வறிக்கையை மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்  தாக்கல் செய்கிறார். 

மறுநாள், அதாவது பிப்ரவரி 1-ந்தேதி மத்திய அரசு பட்ஜெட் தாக்கல் செய்கிறது. இந்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறுவதால் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படாது. அதற்கு பதிலாக இடைக்கால பட்ஜெட்டை நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்கிறார். பாராளுமன்ற தேர்தல் நெருங்குவதால் பட்ஜெட்டில் கவர்ச்சிகரமான அறிவிப்புகள் இடம்பெறலாம் என்று கருதப்படுகிறது.

இதைத்தொடர்ந்து ஜனாதிபதி உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதம் உள்ளிட்ட அலுவல்கள் பிப்ரவரி 9-ந்தேதி வரை இந்த தொடர் நடைபெறுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

budget meeting starts from january 31st


கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?



Advertisement

கருத்துக் கணிப்பு

கடும் வெயிலில் பணிபுரியும் கட்டிட மற்றும் தினக்கூலி தொழிலாளர்களை அரசு எப்படி பாதுகாக்க வேண்டும்?




Seithipunal
--> -->