கள்ளக்காதல் கோபத்தில் கொடூர கொலை: ‘மாரடைப்பு’ என நாடகமாடிய முதியவர் கைது...! - Seithipunal
Seithipunal


கர்நாடக மாநிலம் பாகல்கோட்டை மாவட்டம், ஜமகண்டி தாலுகாவில் உள்ள ஹிரேபதாசலகி கிராமத்தில் நடந்த கள்ளக்காதல் தகராறு, கொடூர கொலையாக முடிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.அந்த கிராமத்தைச் சேர்ந்த எமனவ்வா (40) என்பவர், கணவரை பிரிந்து தனியாக வசித்து வந்தார்.

இந்நிலையில், அதே ஊரைச் சேர்ந்த வயதான விவசாயி ஸ்ரீசைலா பட்டீல் (67) உடன் அவருக்கு பழக்கம் ஏற்பட்டு, அது பின்னர் கள்ளக்காதல் உறவாக மாறியுள்ளது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து வந்ததாக கூறப்படுகிறது.காலப்போக்கில், எமனவ்வா இந்த உறவைத் திடீரென முடிவுக்கு கொண்டு வந்தார்.

அதனைத் தொடர்ந்து, 27 வயது வாலிபர் ஒருவருடன் அவர் புதிய காதல் உறவில் ஈடுபட்டுள்ளார். இதை அறிந்த ஸ்ரீசைலா பட்டீல், கடும் ஆத்திரமடைந்து, எமனவ்வாவுடன் அடிக்கடி தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.இந்த நிலையில், கடந்த 14-ந்தேதி, ஸ்ரீசைலா பட்டீலின் தோட்டத்து வீட்டிற்கு எமனவ்வா சென்றபோது, இருவருக்கும் இடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில், ஆத்திரம் கொண்ட ஸ்ரீசைலா பட்டீல், எமனவ்வாவின் கழுத்தை பிடித்து நெரித்துள்ளார். இதில் அவர் மூச்சுத்திணறி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.சம்பவத்திற்கு பிறகு பதற்றமடைந்த ஸ்ரீசைலா பட்டீல், எமனவ்வா மாரடைப்பால் உயிரிழந்ததாக கிராம மக்களிடம் கூறி, அழுது கதறி நாடகமாடியுள்ளார்.

ஆனால் சந்தேகம் எழுந்ததை தொடர்ந்து தகவல் அறிந்த ஜமகண்டி போலீசார், எமனவ்வாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.பிரேத பரிசோதனை அறிக்கையில், எமனவ்வா மாரடைப்பால் அல்ல, கழுத்தை நெரித்து கொலை செய்யப்பட்டுள்ளார் என்பது உறுதியாகி போலீசாரை அதிர்ச்சியில் ஆழ்த்தியது.

இதையடுத்து, போலீசார் ஸ்ரீசைலா பட்டீலை பிடித்து தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் எமனவ்வாவை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.இதனைத் தொடர்ந்து, ஜமகண்டி போலீசார் ஸ்ரீசைலா பட்டீல் மீது கொலை வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Brutal murder anger over illicit affair elderly man who staged heart attack arrested


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->