மக்களவைத் தேர்தல் வேட்பாளர் பட்டியல்: பக்கா பிளான் போட்ட பா.ஜனதா!
bjp plans release first list candidates
மக்களவைத் தேர்தல் தேதி குறித்து அடுத்த மாதம் தொடக்கத்தில் அட்டவணை வெளியிட உள்ளதாக தலைமை தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.
இதனால் அனைத்துக் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வரும் நிலையில் வேட்பாளர்களை பாரதிய ஜனதா முன்னதாக அறிவிக்க தீவிரம் காட்டியுள்ளது.
பாராளுமன்ற தொகுதிகளான 543 தொகுதிகளிலும் பாரதிய ஜனதா இதுவரை 160 தொகுதிகளில் வெற்றி பெற்றதில்லை என்பது தெரியவந்துள்ளது.
இந்த 160 தொகுதிகளிலும் சில தொகுதிகளில் பாரதிய ஜனதாவுக்கு இரண்டாவது இடம் கூட கிடைத்ததில்லை. இதனால் 160 தொகுதிகளிலும் கூடுதல் கவனம் செலுத்துவதற்காக பாரதிய ஜனதா முடிவு செய்துள்ளது.

சமீபத்தில் நடந்த 5 மாநில தேர்தல் வேட்பாளர்களை பாரதிய ஜனதா முன்னதாக அறிவித்ததால் வெற்றி கிடைத்தது. அதுபோல் பாராளுமன்ற தேர்தலிலும் முன்னதாக வேட்பாளர்களை அறிவிக்க முடிவு செய்துள்ளது.
இந்நிலையில் அடுத்த வாரம் பாரதிய ஜனதா கட்சியின் தேசிய கவுன்சில் கூட்டம் நடைபெற்று பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.
இந்த கூட்டம் முடிவடைந்ததும் வேட்பாளர் பட்டியலை பா.ஜ.க மூத்த தலைவர்கள் ஆய்வு மேற்கொண்டு ஒப்புதல் அளித்து வேட்பாளர் பட்டியலை வெளியிடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
English Summary
bjp plans release first list candidates