நாடாளுமன்ற கூட்டத் தொடரில் பங்கேற்ற எம்பிக்கு கொரோனா தொற்று உறுதி.! பீதியில் பலர்.!! - Seithipunal
Seithipunal


நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு 5 லட்சத்தை நெருங்கியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் 25-ம் தேதி முதல் ஊரடங்கு அமலில் இருந்தாலும் கொரோனா தொற்று குறைந்தபாடில்லை.

பொதுமக்கள் மட்டும் இல்லாமல் மருத்துவர்கள், செவிலியர்கள், தூய்மை பணியாளர்கள், உள்ளிட்ட முன்கள பணியாளர்களும் அரசியல் தலைவர்கள், எம்.எல்.ஏ, எம்.பி, மத்திய, மாநில அமைச்சர்கள் உள்ளிட்டோரும் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மகாராஷ்டிர மாநிலத்தை  சேர்ந்த பாஜக எம்பி வினய் சகஸ்ரபுட்டே கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த வெள்ளிக் கிழமை கொரோனா பரிசோதனை செய்ததில் நெகட்டிவ் என வந்ததால் பாராளுமன்ற கூட்டத்தொடரில் கலந்து கொண்டார். 

நேற்று இரவு அவருக்கு தலைவலியுடன், லேசான காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. மீண்டும் பரிசோதனை செய்ததில் அவருக்கு கொரோனா இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவு செய்தவை, எனக்கு கொரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டதால் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி தனிமைப் படுத்திக் கொண்டேன். என்னுடன் தொடர்பில் இருந்தவர்கள் மருத்துவர்களின் ஆலோசனையைப் பெற்று தனிமைப்படுத்தி கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறேன் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

bjp mp vinay sahasrabuddh corona positive


கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
கருத்துக் கணிப்பு

மழையால் சென்னை தொடர்ந்து பாதிக்கப்பட யாருடைய ஆட்சி காரணம்?
Seithipunal